பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122

இத்தகைய பெயர்ப்புகள் மொழிக்கு மிகுதியான ஆக்கத் தைத் தருவதால் இத்தகைய பெயர்ப்பு முறையை மொழி பெயர்ப்பு’ என்பதற்கு மாறாக 'மொழியாக்கம்’ என்று அழைப் பதே பொருத்தமாகும்,

6. விரிவான மொழிபெயர்ப்பு

(Magnifide Translation)

மூல நூலின் கருத்தை விரித்துக் கூறும் முறையில் அமையும் மொழிபெயர்ப்யே விரிவான மொழிபெயர்ப்பு ஆகும் மூல நூலாசிரியனின் கருத்தை, தெளிவாக உணர்த்த விழைவதே நி அதற்கு மேலும் வலுதேடும் முறையில் பல்வேறு செய்திகள் மும் சேர்க்கையாகவும் பிற்சேர்க் கையாகவும் கூட இடம்பெறற நிலையில் பெயர்ப்பு அமையும்.

இதன் வாயிலாக மூல மொழியில் கூற வந்த செய்திகளை விட அதிக செய்திகளை மொழி பெயர்ப்பு வாயிலாகப் .ெ ற முடிகிறது. ஆனால், இவ்வாறு விரிவாக அமையும் செய்திகள் மூல நூல் கருத்தை அடியொ ற்றியே அமையும்.

இன்னும் சொல்லப் போனால் இவ்வகையில் அமையும் மொழிபெயர்ப்பு முறையில், மூல நூலாசிரியனின் கருத்து மேற் கொண்டும் வலுப்பெற வாய்ப்பேற்படுகின்றது.

7. சுருக்க மொழிபெயர்ப்பு (Abridged Translation)

மொழிபெயர்க்க எடுத்துக் கொண்ட மூல நூலின் கருவை மாற்றாமல் உருவில் மாற்றம் செய்து, சுருங்கிய வடிவில் பெயர்த் துத் தருதலே சுருக்க மொழிபெயர்ப்பு ஆகும். இவ்வகை மொழி பெயர்ப்பில் மூல ஆசிரியன். எழுதியவற்றுள் தேவையற்ற பகுதி களை நீக்கி விடுவது அல்லது சுருக்கி விடுவது அல்லது மூலத்தின் கருவை எந்நிலையிலும் சிதைக்காமலும் மாற்றாமலும் அவற்றின் திரட்சியை சுருங்கிய வடிவில் தருவது இவ்வகை பெயர்ப்பாகும்.

இவ்வகையில் அமையும் பெர்ப்புகள் மூல நூலை முழுமை யாகப் படிக்க வேண்டும் என்ற ஆவலைப் படிப்போரிடையே ஏற்படுத்தும் வகையில் ஆர்வத் தூண்டல் தருவனவாக அமைதல் வேண்டும். சுருங்கச் சொல்வதாயின் மூலத்தின் முக்கியப் பகுதி கள் அனைத்தும் இப்பெயர்ப்பில் அமையுமாறு மொழிபெர்ப்பாளர் பார்த்துக் கொள்வது அவரது தலையாய கடமையாகும்.