பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

184

டுள்ளது.' என்று டாக்டர் இராமசாமி அய்யர் போன்றோர் கூறியுள்ளனர். இந்நிலையில் மாற்றம் காண அங்கும் "தூய மலையாள மொழி இயக்கம் தோன்றி வளர்ந்து வருகிறது.

இந்தப் பின்னணியோடு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியமும் இலக்கணமும் கொண்டு, உயரிய நாகரிகத்தையும் உயிர்ப்போடு கூடிய பண்பாட்டையுமுடைய தமிழ்மொழியின் தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கத் தொடங்கிய தனித் தமிழ் இயக்கம்’ எல்லா வகையிலும் வரவேற் கத்தக்கதே யாகும்.

மொழி, இன மலம் காக்கும் மொழித் தூய்மை

ஒரு இனத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விண் டுரைக்கும் திறவு கோலகளே எழுத்தும் சொல்லும் மொழியும், இவை அறிவாழத்தை அளந்து காட்டும் அளவீடுகள் மட்டு மன்று, வாழ்வியற் சிறப்புக்களையும் இலக்கிய, இலக்கண தனித்துவத்தையும் போற்றிப் பாதுகாக்கும் காவற் சக்திகளு மாகும். எனவே. இவற்றைக் கருத்துரன் றிக் காக்க வேண்டுவது தாய்மொழிப் பற்றாளர்கள ன் தனிப்பெரும் கடமையுமாகும் என் பதை மறுத்தற்கில்லை.

கருத்தில் கொள்ளவேண்டிய காலத் தேவை

இச் சந்தர்ப்பத்தில் மற்றுமொரு செய்தியையும் மனதிற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.இன நலமும் மொழி நலமும் காக்க முனையும் அதே நேரத்தில் காலத்தின் தேவைக்கேற்ப விரைந்து பெருக வேண்டிய அறிவு வளர்ச்சி நலத்தையும் கருத் திற்கொண்டு செயல்படுவதே அறிவுடைமையாகும். தமிழ் எழுத்தில் மறைந்துள்ள கிரந்த எழுத்தொலி

அறிவியல் தமிழைப் பொருத்தவரை கலைச்சொற்களை ஒலி பெயர்ப்பாகப் பயன்படுத்தும்போது நடைமுறைச் சிக்கலை உணர்ந்து, அதற்கேற்ப தொல்காப்பியர் வரையறுத்துக் கூறிய (கிரந்த எழுத்தோடுகூடிய) வடசொல், வடவெழுத்துகளுக்கான ஒலிப்பிலக்கண விதிமுறைகளின்றும் சற்று வழுவி செயல்பட வேண்டியதாயுள்ளது.

இவ்வாறு கூறும்போது சிலர் குறுக்கிட்டு "எந்த கிரந்த எழுத்தொலியைப பெற விழைகிறீர்களோ அதே கிரந்த ஒலி மறைவான ஒலியாகத் தமிழ் எழுத்துகளிடையே அமைந்தே இருக்கிறது என வாதிடுகின்றனர். சான்றாக, மஞ்சல் என்ற சொல்லில் 'ஜ' ஒலி வருகிறது. பகல்’ என்பதில் ஹ ஒலி வரு கிறது சந்தை' என்பதில் ஸ்' ஒலி உள்ளது என்றெல்லாம் கூறு கின்றனர்.