பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81

களைப் பற்றிய செய்திகளும் உரை நடையில் மக்களைச் சென்ற டைந்ததோடு, கருத்துப் பரிமாற்றம் விரைந்து நடைபெறவே மக்களிடையே அதிக நெருக்கமேற் ட்டது

ஆங்கில மொழி படித்த தமிழறிஞர்களும் புலமையாளர்களும் மெத்த வளர்ந்துவந்த மேனாட்டுக் கலைகளையெல்லாம் தமிழ் கூறு நல்லுலகுக்கு தம் தாய்மொழி பாகிய தமிழிலே தர விரும் பினர்.

புத்திலக்கிய வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

அக்காலத்தில் ஐரோப்பாவில் செழிப் பாக வளரத் தொடங் கிய புதினப் படைப்பு"களைப் போன்று தமிழ் மொழி பில், தமிழகச் சூழலிலான நிகழ்ச்சிகளை அமைத்து மாயூரம் வேத நாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற புதினத் தை எழுதி வெளியிட்டார். புதினத் துறையில் வெளிவந்த முதல் தமிழ் நூல் இதுவேயாகும். அடுத்து சித்தி லெவை என்பவர் எழுதிய ‘அசன்பே சரித்திரம்' என்ற புதினம் இரண்டாவது புதினமாகத் தமிழிலேவந்து பிற்காலத்தில் வரலாற்றுப் பின்னணி கொண்ட புதினங்களும், சமூகப் பிரச்சினைகளை அலகம் சமூகப் புதினப் படைப்புகளும், அத்தியாயத்துக்கு அத்தியாயம் ஆவலைத் தூண்டும் முறையிலான மர்மப் புதினங்களும் வெளிவர வழி வகுத்தது. அதனைத் தொடர்ந்து பலரும் தமிழில் புதினங் களை எழுதி வெளியிடலாயினர்.

அதே போன்று சிறுகதை’ என்ற புதிய வகையான இலக்கி யமும் ஆங்கிலேயர் உறவால் தமிழகம் பெற்று, அத்துறையிலும் தொடர்ந்து வளர்ச்சி காண முடிந்தது.

இவற்றைத் தொடர்ந்து தமிழில் கட்டுரை வரைதல், வாழ்க் கை வரலாறு, பயண அனுபவ நூல்கள், ஒரங்க நாடகங்கள் போன்ற புதிய வடிவிலான இலக்கிய வகைகளும் தோன்றி வளரத் தொடங்கின.

வட்டம் தாண்டிய தமிழ் அறிவியல்

சங்ககாலம் முதலே கணிதம், வணிகம், மருத்துவம்,தொழில் துணுக்கங்கள் போன்றவையெல்லாம் எல்லோருக்கும் பொது வான இலக்கியத் துறைகளாக இல்லாமல் சம்பந்தப்பட்ட ஒவ் வோர் குடும்பத்தினர் பேணிவந்த கலைகளாகவே இருந்தன.

6