பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

28

அறிவியலால் வளர்ச்சி காணும் பிற மொழிகள்

தமிழைப்போல் பழமையுடையதாகக் கருதப்படும் சீனமொழி அறிவியல் மொழியாக வடிவெடுத்து, எழுத்துருவில் பற்பல மாற்றங்களை ஏற்று, இன்றும் தன்னை ஒரு அறிவியல் மொழி' என்ற நிலைக்கு மாற்றி உயர்த்திக் கொண்டு வருகிறது.

தமிழைப்போல் பழமையுடைய மேற்குலக மொழியான கிரேக்க (கிரீக்) மொழிகூட எழுத்திலும் சொல்லிலும் வேண்டிய மாறுதல்களை ஏற்றுக்கொண்டு, கணினி மொழியாகத் தன்னைத் தயார் படுத்திக்.ெ rண்டு விட்டது. எனவே, காலத்தின் போக்குக் கும் தேவைக்குமேற்ப வளைந்து நெளிந்து கொடுக்கும் மொழியே கால வெள்ளத்தை எதிர்த்து நின்று வாழ முடியும்.

விழிப்புணர்வுக்கான கட்டாயச் சூழல்

ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட வேண்டிய மாற்றம் அறிவிய லின் துணையால் பதது ஆண்டுகளில் ஏற்படும் நிலை. கால வேகத்திற்கேற்ப மொழி, இலக்கிய விழிப்புணர்வு தமிழ்ச் சமுதா ய த்தில் ஏற்பட்டே திர வேண்டிய கட்டாயச் சூழல்.

இன்றைய வேகமான காலச் சூழல் எவ்வகையான தமிழைத் தேடுகிறது என்பதைப்பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல் படும் கால கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை அழுத் தந் திருத்தமாக உணர வேண்டுவது அவசியம்.

தமிழ் இயல்பான அறிவியல் மொழி

தமிழ் வளர்ச்சிக்கு வழிகாணும் வகையில் மொழியைப்பற்றிய நமது கண்ணோட்டம் மாற வேண்டும். உலகத்து மொழிகளி லெல்லாம் செம்மைசான்ற ஒரு சில மொழிகளில் தமிழும் ஒன்று என்பது மொழியியலாளர்களின் முடிவு. அதன் பெருமையைவிட அதன் உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்தவர்கள் மிகச்சிலரே ஆவர். தமிழை இன்னும் ஓர் திறம்பட்ட இலக்கியமொழியாகக் காணும் மனப்பாங்கு மட்டுமே நம் மக்களின் மிகுந்துள்ளது. அது சிறந்த இலக்கிய மொழியாக மட்டுமல்லாது மிகச் சிறந்த அறிவியல் மொழியாகவும் அமைந்துள்ளது. இஃது வெறுத தமிழார்வத்தாலோ அன்றி மொழிப் பற்றாலோ கூறும் வார்த்ம்ை கள் அன்று. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடையறாது அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியிலே கருத்துான்றி உழைத்து