பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

" "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்'

என்கிறார். நிலத்தை பலமுறை உழுது புழு திமண்போல் ஆக்கி னால், கதிரவனிடமிருந்து தேவையான நிலச்சத்தை பெரும். அதன்பிறகு அந்நிலத்தின் நல் விளைச்சலுக்கு ஒரு பிடி எரு கூடத்தேவைப்படாது என்ற அறிவியல் உண்மையைக் கூறு வதைக்காணுமிடத்து, நம் முன்னோர் எந்த அளவுக்கு அறிவியல் சிந்தனையோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

அவர்கள் கட்டடக் கலையிலும் நீரியல் துறையிலும்கூட மிகப் பெரும் அளவுக்கு வல்லுனர்களாக விளங்கி வந்தார்கள் என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்ட கோயில்களும் அழியாச் சின்னங்களாக இன்றும் விளங்கு கின்றன. அழகான நகரமைப்புத்திறனிலும் இமயமென உயர்ந்து நின்றவர்கள் பழந்தமிழர். சிறந்த நகரமைப்புக்கு அழியாச் சின் னங்களாக இன்று வரை அமைந்துள்ளன. மதுரையும் காஞ்சியும்.

இன்னும் சிலப்பதிகாரப் பூம்புகார் நகரமைப்பும் முகில்தோய் மாடங்களும், கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத் தின் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்'களாக வாழ்ந்த தமிழர்கள் உலகெங்கும் வாணிபத்திற்கென செலுத்திய கப்பல்களும், அவற் றிற்கான தொழில் நுட்பத்திறன்களும் இன்று இலக்கியச் செய்தி களாக இருக்கின்றன. அவை பற்றிய அறிவியல் நூல்கள் இருந் திருக்கலாம்; ஆனால்அவை இன்று கிடைத்தில எனினும் தமிழர் கப்பல் செலுத்தி மேற்கே ஐரோப்பா வரையிலும் கிழக்கே கம் போடியா வரையிலும் தெற்கே நியூசிலாந்து வரையிலும் வடக்கே சீனம் வரையிலும் சென்றதற்கான சான்றுகள் தொல்பொருள் செய்திகளாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

சீனாவில் காண்டன் மாநகரில் பழந் தமிழர் பண்டகசாலை கண்டறியப்பட்டுள்ளது. அங்கே தமிழ் மொழிக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தெற்கே நியூசிலாந்தில் மூழ்கிக் கிடந்த கப்பல் ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் பொறித்த கப்பல் மணியொன்று கிடைத்துள்ளது. மேற்கு ஐரோப்பா வரை தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தற்கான பல ஆதாரங்கள் இன்று கிடைத் துள்ளன.