பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

192

உரிய தனித்துவத் தன்மையாகும். மனித குலத்தின் சில பிரி வினர்கள் இன்று வரிவடிவில்லாது ஒளி வடிவிலேயே மொழி யைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது நினைவிற் கொள்ளத்

தக்கதாகும்.

இந்த மொழிகள் மனிதகுல முழுமைக்கும் ஒரே மாதிரியாக அமையவில்லை என்பது வெளிப்படை. ஒவ்வொரு மனிதக் குழு வினரும் ஒவ்வொரு வகையான ஒலி வடிவ, வரிவடிவ மொழி களைக் கையாண்டு வருகின்றனர்.

இவ்வாறு மனிதன் தன் தேவை நிமித்தம் தானே உருவாக் கிக்கொண்ட மொழியின் இயல்பு, அவர்கள் வாழ்ந்த் இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலை, வாழ்க்கைப் போக்கு இவற்றிற் கேற்பவே அவர்களின் மொழி அமைந்துள்ளது.

பல நூறாண்டு வளர்ச்சி

மொழியானது ஒலி வடிவிலிருந்து வரிவடிவிற்கு மாறி வளர பல நூற்றாண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது மொழியிய

லார் கருத்து.

அக்கால மனிதர்கள் கருத்துகளை உணர்த்த ஒலிகளோடு சைகைகளையும் இணைத்து வெளிப்படுத்தினர். அதையும் விட வலுவாகவும் துல்லியமாகவும் தங்கள் எண்ணங்களை பிறர்க் குணர்த்த விழைந்தபோது சில பொருள்களைக் காட்டியும் சில படங்களை வரைந்து காட்டியும் உணர்த்த முற்பட்டமையை சில வரலாற்று நிகழ்ச்சிகள் மூலம் நம்மால் அறிந்து கொள்ள

முடிகிறது.

தவளை, எலி, அம்பு உணர்த்திய எச்சரிக்கை

பொருட்கள் மூலம் கருத்துணர்த்தும் போக்கு நிறுவியதைச் சுட்டிக் காட்டும் வகையில் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியரான ஹிராடோட்டஸ் ஒரு நிகழ்ச்சியைத் தம் வர லாற்று நூலில் குறித்துள்ளார்.

பாரசீக மன்னன் டரையஸ் என்பானுக்கும் சித்தியர்களுக் கும் இடையே சண்டை, சச்சரவுகள் நிலவின. இதனால், பார சீக மன்னன் டரையசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்க தங்கள் சார்பில் தூதுவன் ஒருவனை அவனிடம் அனுப்பினார்கள். டரையஸ் அவைக்களம் சென்ற அத்துாதுவன் அரசன் முன்பாக தவளை, எலி, அம்பு ஆகியவைகளை வைத்தான். அதன் நோக் கம் தவளை தண்ணிருக்குள் பதுங்குவதுபோல். எலி வளைக்குள்