பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

188

அதற்கு இதனினும் சிறப்புடைய மொழிபெயர்ப்பு முறைகளே சாலச் சிறந்ததாக அமைய முடியும்.

சிறுவர்க்கான அறிவியல் மொழிபெயர்ப்பு முறைகளைப் பற்றி ஆராய்வதற்கு முன் ஒரு முக்கியமான செய்தியை நெஞ் சத்திலிருத்திக் கொள்ள வேண்டும்.

அறிந்த பெரியவர்களும் அறியாச் சிறுவர்களும்

படித்த பெரியவர்கள் அறிவியலைப் பற்றி, அதன் நுட்பம், அதனால் விளையும் பயன்களைப் பற்றியெல்லாம் முன்பே ஒரளவு அறிந்தவர்கள். அதன் பயன்களையும் உணர்ந்தவர்கள். இத்தகைய அடிப்படை அறிவுடையவர்களுக்கு அறிவியல், தொழில் நுட்பக் கூறு, களைப் பெயர்த்துக் கூறுவதும் அவற்றைப் புரிந்து கொள்வதும் அவ்வளவு கடினமாக இராது. ஆனால், சிறுவர்களோ அவைகளைப்பற்றி அதிகம் தெரியாதவர்கள். எனி னும், அவற்றின் பயன்பாடுகளை அறியவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றை அனுபவிக்கவும் துடிப்பவர்கள். எனவே அவர்கட்கு அறிவியலைத தாய்மொழி வாயிலாக மூல நூலாகக் கூறினாலும் மொழிபெயர்ப்பாகச் சொன்னாலும் அவர் கள் பருவத்திற்கேற்ப சொல்லாட்சியையும் எளிய வாக்கிய அமைப்பையும் கைக்கொண்டு, அவர்கள் உள்ளம் ஏற்கும் வண்ணம் சொல்ல வேண்டியது இன்றியமையாததாகும்.

எளிய கடையும் இனிய சொல்லாட்சியும்

சிறுவர்க்கான மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை, பெரிய வர்களை மனதிற்கொண்டு செய்யும் பெயர்ப்பு முறையினும் சற்று நெகிழ்வுத் தன்மையுடன் அணுக வேண்டியது அவசியமாகும். இயன்றவரை மொழியாக்கமாகவோ அன்றி தழுவலாகவோ தருவதே பொருத்தமுடையதாக அமையும். மூல அறிவியல் நூலில் அறிவியல் செய்திகளைக் கூறும் சொற்றொடர் மிக நீண்ட தாக இருப்பின் அதை அப்படியே நீண்ட வாக்கியமாகவே மொழி பெயர்த்தால், சிறுவர்களைப் பொருத்தவரை அதிகப் பயன் விளையாது. அவர்கள் படித்தறிவதற்கேற்ற வகையில் சிறுசிறு சொற்றொடர்களாகக் கொடுக்க வேண்டும். இங்கு மூல நூலாசிரியனைத் திருப்தி செய்வதைவிட சிறுவர்களை மன நிறைவடையச் செய்வதே முக்கியம். இதற்கேற்ப நடையிலும் சொல்லாட்சியிலும் எளிமையே முதலிடம் பெறுதல் வேண்டும்.