பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

நூலாசிரியர் கலைமாமணி

மணவை முஸ்தபா

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் பட்ட தாரியான கலைமாமணி மணவை முஸ்தபா சர்வதேச இதழான யுனெஸ்கோ கூரியர் தமிழ் மாத இதழின் ஆசிரியராவார்.

"இன்றைய இலக்கியப் போக்கு முதலாக ஐந்து தமிழ் நூல் களை எழுதியுள்ள இவர், ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் ம்லையாளதிலிருந்து ஏழு நூல்களையும் தமிழில் பெயர்த்துள்ளார். இவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு ஏழு தொகுப்பு நூல்களும் வெளி வந்துள்ளன. முப்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை யும் ஐந்து தொலைக்காட்சி நாடகங்களையும் படைத்துள்ளார். எட் டாண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் பணி யாற்றியுள்ளார். சர்வதேச தமிழ் ஆராய்ச்சிப் பேரமைப்பின் (IATR) இந்தியக் கிளை இணைச் செயலாளராக உள்ளார்.

இவரது கலை, இலக்கிய, அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் கலைமாமணி விரு தளித்துப் பாராட்டியுள்ளது மும்முறை உலகை வலம் வந்து தமிழ்ப் பணியாற்றியமையைப் பாராட்டி தமிழ்நாடு மாகில கூட்டுறவு வங்கி அதிகாரிகளின் மன்றம் தமிழ்த் தூதுவர் பட்டம் வழங்கிச் சிறப் பித்துள்ளது. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக இவர் ஆற்றியுள்ள இருபதாண்டுப் பணியைப் பாராட்டி டாக்டர் ஜாகீர் ஹுசைன் கலலூரி அறிவியல் மன்றம் வளர்தமிழ்ச் செல்வர்' பட்டம் தந்து பாராட்டியுள்ளது.

1988ஆம் ஆண்டிற்சான தமிழ்நாடு அரசின திரு. வி.க.

விருது பெற்றுள்ளார்.

மீரா அறநிறுவனத் தலைவரான இவர் இதுவரை ஏட்டு இலக்கியக் கருத்தரங்குகளைச் சிறப்பாக கடத்தியுள்ளார்.

வெளியீடு :

மீரா பப்ளிகேஷன்

AE-103, அண்ணா நகர் சென்னை - 600 040.