பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114

அத்தகைய வளர்ச்சியைத் தொடர அல்லது அதற்கு ஈடு கொடுத்து வளர்ந்து வளம்பெற முதற்படியாக ஐரோப்பிய மொழி களில் எழுதப்பட்டுள்ள புத்துலகச் சாத்திர நூல்களைத் தத்தம் மொழிகளில் உடனடியாக மொழி பெயர்த்துக் கொள்வதே சாலச் சிறந்தது என்பதை அறிவுலகம் அழுத்தமாக உணரத் தொடங் கியது. இப்போக்கில் பின்னடைவு ஏற்படின் என்றென்றும் நீக்க வியலா தேக்கநிலை ஏற்பட்டே தீரும் என்ற எச்சரிக்கை தத்தம் மொழி வளர்ச்சியில் அக்கரை கொண்ட அறிஞர் பெருமக் களால் அவ்வப்போது சொல்லப்பட்டு வந்துள்ளது. இவ்வகை யில் புதுமைக் கவிஞர் பாரதியும்,

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்'.

எனக் கூறி, மொழிபெயர்ப்பின் வாயிலாகத் தமிழர்கள் புத்துல கக் கல்விபெற, அறிவியல் அறிவை வளர்க்க, ஆக்க வளர்ச்சிக் கான உணர்வைப் பெருக்க, அதன்மூலம் தமிழைக் காலப்போக் குக்கேற்ற திறம் பெற்ற மொழியாக ஆக்க, அதன்வழி மக்களின் சிந்தனையை வளர்த்து, வாழ்க்கை சிறக்க வழிகோல முனைந்தார்.

மொழிபெயர்ப்பாற்றலை உணரா நிலை

மொழிபெயர்ப்புத் துறையின் நுட்பத்தன்மை பற்றிய தெளி வான சிந்தனை இன்றும்கூட நம்மவர்களிடம் முழுமையாக ஏற் பட்டுள்ளதாகக் கருதமுடியவில்லை. அதன் இயல்பைக் குறைத்து மதிப்பிடும் போக்கே இன்னும் நிலவுகிறது.

'இதென்ன பெரிய காரியம்? ஒரு மொழியிலுள்ளதை இன் னொரு மொழியில் சொல்லுவதுதானே மொழிபெயர்ப்பு. இதற்கு இரு மொழி தெரிந்தால் போதுமே, இதற்குமேல் இதில் என்ன இருக்கிறது?’ எனக் கூறத் தயங்குவதில்லை. மொழிபெயர்ப்புக் கலையின் நுணுக்கங்களைப் பற்றிய அறிவோ, அனுபவமோ இல்லாதவர்களின் கூற்றே இது என்பது தெளிவு.

  • முறைப்படியான மொழிபெயர்ப்பு'ப் பணி இவர்கள் எண்ணு வதுபோல் அவ்வளவு எளிதானது அல்ல.

மூலத்தைவிட மொழிபெயர்ப்புக் கடினம்

நாம் மனம் போன போக்கில ஒரு யானைப் படம் வரைய லாம். அது பானைபோல் இருந்தால் கூட, மற்றவர்கள் அதனை நவீன பாணி யானை ஓவியம் எனக் கருதி ஏற்றுக்