பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

apyrogen : வாலை வடிநீர் : நோய் நுண்மங்கள் நீக்கப்பட்ட வாலை வடித்த நீர். இது கண்ணாடிக் குமிழ்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதில் காய்ச்சல் உண்டு பண்ணுகிற நோய் நுண்மங்கள் இரா. ஊசி மூலம் செலுத்தக் கூடிய தூள் வடிவிலுள்ள மருந்துகள் தயாரிக்க இது பயன்படுகிறது.

aqua . நீர் : நீரியல் பொருள்: நீர்மம்; கரைசல். aqueduct : சிறுகுழாய்; நீர் நாளம்: பாலுண்ணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறு குழாய்

aqueous humour : முன்க ண நீர் விழி முன்னறை நீர்மம் : விழிமுன தோலுக்கும் விழிச்சிலலுக்கும் இடையிலுள்ள நீர் .

aquosity : நீர்த்தன்மை

arachidonic acid : அராக்கிடோனிக் அமிலம். இன்றியமையாத கொழுப்பு அமிலங்களில் ஒன்று. மனிதர் , விலங்கு நுரையீரல் மற்றும் உறுப்புக் கொழுப்புகளில் சிறிதளவு உள்ளது. இது வளர்ச்சியை உண்டு பண்ணும் காரணி.

arachis oil : கடலை எண்ணெய் நிலக்கடலையிலிருந்து எடுக்கப்படும் ஆலிவ் எண்ணெய் போன்றது.

arachnodactyly: சிலந்தி விரல் நோய் : சிலந்தி போன்ற விரல்கள் உண்டாகும் ஒரு பிறவி நோய்

arachnoid : சிலந்திச் சவ்வு சிலந்தி வலையுரு : சிலந்தி நூல் (நூலாம்படை) போன்ற நீர் மயிர் சவ்வு. இது மூளையையும் முதுகந்தண்டினையும் மூடியிருக்கும்.

aramine : ஆராமின் : 'மெட்டாராமினால்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

arborization : மரத்தோற்ற நரம்பிழை; கிளை விரிவு : மரம் போன்ற தோற்றமுடைய நரம் பிழைம அமைப்பு.

arboviruses : கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் ; ஆர்போ அதி நுண்ணுயிர் : ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களினால் பரவும் 'RNA' என்ற நோய்க் கிருமிகள் இதில் கொசுவினால் பரவும் நோய்க் கிருமிகளும் அடங்கும். மஞ்சள் காய்ச்சல, மூட்டுகளில் கடும் நோவு உண்டுபண்ணும் கொள்ளைக் காய்ச்சல் (டெங்கு காய்ச்சல்) போன்ற நோய்கள் இவற்றினால் பரவுகின்றன.

arcus senilis: மூப்புப்படலம் : வயது ஏறஏற கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.

areola : மார்பு முகட்டு வட்டம் ; முலைக் காம்புத் தோல் : மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம்.

arfonad : ஆர்ஃபோனாட் : 'டிரிமெட்டாஃபான்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

arginase : ஆர்கினேஸ : நுரையீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவற்றில் காணப்படும் ஒரு வகை இயக்குநீர் (என்சைம்). இது ஆர்கினைன்' என்ற பொருளை ஆர்னித்தைன். மூத்திரை ஆகிய பொருள்களாகப் பிரிக்கிறது.

arginine : ஆர்கினைன் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. கடுமையான நுரையீரல் நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

arginino-succinuria : ஆர்கினினோ-சக்சினூரியா : சிறுநீரில் ஆர்கினைன், சக்சினிக் அமிலம் ஆகியவை அடங்கியிருத்தல். இது மனக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது.