பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127

இதில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய மற்று மொரு செய்தி மூலமொழி பேசும் பாத்திரம் திரைப்படக் காட்சி யில் தன் கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்திப் பேசும் போது எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதே அளவு நேரத்திற்குள் அடங்கும் வகையில் மொழிமாற்ற மொழி பெயர்ப்பு அமைய வேண்டும். எனவே, இத்தகைய மொழி மாற்ற மொழிபெயர்ப்புச் செய்பவர்கள் சில தனித்திறமை பெற்றவர் களாகவும், திறம்பட்ட சொல்லாட்சி மிக்கவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

11. கருவி மொழிபெயர்ப்பு

(Machine Translation)

மின்னணு இயந்திர நுட்ப வளர்ச்சியின் விளைவாக மனிதர் கள் செய்யும் பணிகள் பலவற்றையும் இயந்திாங்கள் மூலம் செய்துகொள்ளும் போக்கு இருபதாம் நூற்றாண்டில வேகமாக வளர்ந்து வலுப்பெற்று வருகிறது. மனிதர்கள் செய்யும் காரியங் சளில் மிகப் பலவற்றை இயந்திர சாதனங்கள் மூலம் நிறை வேற்றுவதில் மனிதன் நாளுக்கு நாள் மகத்தான வெற்றிகளைப் பெற்றே வருகிறான். அத்தகைய முயற்சிகளில் ஒன்று தான் மின்னணு இயந்திரமான கணினியின் துணை கொண்டு மொழி பெயர்ப்பு செய்யுப முயற்சி. அம்முயற்சியின் இறுதி வெற்றியாக நமக்கு வாய்திருப்பதுதான் கணினி மொழிபெயர்ப்பு' (Computer Translation) எனும் புதுவகை இயந்திர மொழி பெயர்ப்பு.

இயந்திரத்தின் மூலம் மொழிபெயர்ப்பு செய்யும் முயற்சி கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், விரும்பும் அளவுக்கு பெரும் வெற்றியை அம் முயற்சி யில் பெற்றுவிட்டதாகக் கூற முடியவில்லை. ஆயினும் இதுவரை பெற்றுள்ள வெற்றி மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக அமைந் துள்ளது.

அறிவியல் தொழில் நுட்ப இயல்களுக்கான மொழிபெயர்ப் புச் செய்வோர்க்கு வேண்டிய கலைச் சொற்களையும் அதற்கு இணையான பெயர்ப்பு மொழிச் சொற்களையும் தொகுத்து வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் விரைந்து தந்து, மொழிபெயர்ப்புப் பணி துரிதமாக நடைபெற பேருதவியா யமைந்து வருகிறது.

இவ்வாறு மொழிபெயர்ப்புக்குத் பெருந்துணையாக கணினி அமைந்திருந்த போதிலும் அவ்வப்போது மனித துணையும் தேவைப்படவே செய்கிறது.