பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

amenorrhoes: மாதவிடாய் தோன்றாமை ; மாதவிலக்கின்மை, தீட்டு நிறுத்தம் : மாதவிடாய் தோன்றாதிருத்தல்; மாதவிடாய் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றாதிருந்தால் அது தொடக்க நிலை மாதவிடாய் தோன்றாமை ' எனப் படும். மாதவிடாய் ஒரு முறை தொடங்கிய பிறகு தோன்றாம லிருந்தால், அது 'இரண்டாம் நிலை மாதவிடாய் தோன்றாமை" எனப்படும்.

amentia : மன வளர்ச்சிக் குறைபாடு ; உளக் குழப்பம்: மூளைத் திறளிழப்பு : பிறவியிலிருந்து மன வளர்ச்சி குன்றியிருத்தல் . மனத தளர்ச்சியினால் ஏற்படும் பைத் திய நிலையிலிருந்து (Dementia) இது வேறுபட்டது.

amethocaine hydrochloride : அமெத்தோக்கைன் ஹைட்ரோ குளோரைடு : கோக்கைன் என்ற மருந்துப் பொருளின் சில பண்புகளையுடைய ஒரு செயற்கைப் பொருள். தண்டுவட உணர்ச்சியிழப்பு மருந்தாகப் பயன்படுகிறது 60 மி.கி. அளவுடைய மாத்திரை களாக இது பயன்படுத்தப்படு கிறது.

ametria : கருப்பை இன்மை பிறவியிலேயே கருப்பை இல்லாதிருத்தல்.

ametropia : பார்வைக் குறைபாடு குறை பார்வை : கண்ணின் ஒளிக் கோட்ட ஆற்றல் குறைபாட்டினால் உண்டாகும் பார்வைக் குறைபாடு.

amicar : அமிக்கார் அமினோ காப்ராய்க அமிலத்தின வாணிசுப் பெயா.

amidin : மாச்சத்துக் கரைசல் கரைசல் நிலையிலுள்ள மாச்சத்து.

amikacin : அமிக்காசின் பாக்டீரியச் செரிமானப் பொருள்கள் (என்சைம்கள்) தரங்குறைவதைத் தடுக்கும் ஒரு நோய் எதிர்ப்புப் பொருள். இது 'கனாமைசின்' பொருளிலிருந்து எடுக்கப்படும் செயற்கை வழிப் பொருள்.

amiken : அமிக்கென் : 'அமிக்காசின்' என்னும் எதிர்ப்புப் பொருளின் வாணிகப் பெயர்

amino acids : கரிம அமிலங்கள் (அமினோ அமிலங்கள் ) : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களுக்கு பதி லாக கரிம (அமினோ ) அணுக் களைக் கொண்ட கரிம அமிலங் கள் (NH,) புரதத்தை நீரியல் பகுப்பு செய்வதன் விளைவாக இவை கிடைக்கின்றன. இவற்றிலிருந்து உடல் தனது சொந்தப் புரதங்களை மறுபடியும் தயாரித்துக் கொள்கிறது இவை அனைத்தையும் உடல் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. எனவே இவை உணவில் இன்றியமையாது சேர்க்கப்பட வேண்டும். ஆர்கினைன், ஹிஸ்டிடின். ஐசோலியூசின், லியூசின், லைசின். மெத்தியோனைன். ஃபினைலாலனின், திரியோனின், டிரிப்டோ ஃபான், வாலைன் ஆகியவை இனறியமையா கரிம அமிலங்கள். எஞ்சியவை அவசியமற்ற கரிம அமிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

aminoaciduria : கரிம அமில நோய் அமினோ அமிலச் சிறுநீர் : சிறுநீரில் கரிம அமிலம் (அமினோ அமிலம்) இயல்பு அளவுக்குமேல் இருப்பதால் உண்டாகும் நோய். இது வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்த தவறு இருப்பதைக் காட்டுகிறது

aminocaproic acid : அமினோ காப்ராய்க் அமிலம் : கட்டியாக உறையக்கூடிய நாரியல் கசிவு ஊனீர் (ஃபைப்ரின்) சீர்குலை வதைத்தடுப்பதன் மூலம் நேரடியாகக் குருதிப்போக்கினை நிறுத்