பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். 

agnathia : தாடை வளர்ச்சிக் குறைபாடு; கீழ்த் தாடையின்மை : தாடை வளர்ச்சியின்றியோ முழுமையாக வளர்ச்சியடையாமலோ இருத்தல்,

agnosia : புலனுணர்வு இன்மை ; அறிந்துணராமை; நுண்ணுணர் விழப்பு : புலனுணர்வுகளை உணர இயலாதிருத்தல்.

agonist : தசைச் சுருக்கம் : ஒரு தசை. இயங்குவதற்காகச் சுருங்குதல்.

agoraphobia : திடல் மருட்சி; வெட்டவெளி அச்சம் : பெரிய, திறந்த வெளிகளில் இருக்கும் போது தன்னந்தனியாகி விட்டோம் என ஏற்படும் பீதியுணர்வு அல்லது அச்சம்,

agranulocyte : குருதி நுண்மம் : சிறுமணிகளாக இராத குருதியின் நிறமற்ற நுண்மம்

agranulocytosis : குருதி நுண்ம க் குறைபாடு : குருதி நுணமங்கள் வெகுவாகக் குறைந்திருத்தல் அல் லது முழுவதுமாக இல்லாதிருத் தல்.

agraphis: எழுத்தாளர் விசிப்பு: மூளை நோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.

agus : முறைக் காய்ச்ச ல் ; குளிர் காய்ச்சல் : குளிர் காய்ச்சல்; மலேரியாக் காய்ச்சல்,

aids : எய்ட்ஸ் (AIDS) ; ஈட்டிய நோய்த் தடைக் காப்புக் குறை பாட்டு நோய் (Acquired Immune Deficiency Syndrome).

aids-related complex : எய்ட்ஸ் சார்ந்த கோளாறுகள் ; வெளிப்படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும்; அல்லது இது காய்ச்சலின் தன்மையுடைய தாக இருக்கும்.

air : காற்று : பூமியைச் சூழ்ந் திருக்கும் வாயுமண்டலமாக உருவாகியுள்ள வாயுக்கலவை. இதில் 78% நைட்ரஜன், 20% ஆக்சிஜன், 0.4% கார்பன்டையாக்சைடு, 1% ஆர்கான், ஓசோன், நியோன், ஹீலியம் முதலியவற்றின் சிறுசிறு அளவுகள், பல்வேறு அளவிலான நீராவி ஆகியவை அடங்கியுள்ளன.

air-born : ஏர்-பான் : 'அசிட்டில் சிஸ்டைன்' என்பதன் வாணிகப் பெயர்.

akethisia : கட்டளை நரம்புத் துடிப்பு; உட்கார இயலாமை : தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான கட்டளை நரம்பு (இயக்கு தசை) எப்போதும் படபடவெனத் துடித்துக் கொண்டிருக்கும் நிலை. நரம்புக் கோளாறுகளுக்கான மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இது உண்டாகக் கூடும்.

akinetic : இயக்கமின்மை ; அசை வற்ற உடல் இயக்கம் இல்லாதிருக்கும் நிலை.

akineton - அக்கினட்டோன் : "பைபெரிடன்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

aldactide : அலால்டாக்டைடு : ஸ்பிரோனோலாக்டோன் ஹைட ரோ ஃபுளூமிதியாசைடு ஆகியவை அடங்கிய மருந்தின் வாணிகப் பெயர்.