பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alzheimer's disease : அல்ஜைமர் நோய் : மூளைத் தளர்ச்சியினால் அறிவு குழம்பி ஏற்படும் பைத்தியம்.

amalgam : உலோகப் பூச்சு, இரசக்கலவை (இரசக்கட்டு) மாழைப் பூச்சு : பாதரசமும் ஏதேனும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை .'பல் இரசக் கலவை' என்பது, பல் குழியை நிரப்புவதற்குப் பயன்படும் ஓர் இரசக் கலவை. இதில் பாதரசம், வெள்ளி, வெள் ளீயம் (டின்) கலந்துள்ளன.

amantadine : அமன்ட்டாடின் : நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து. இது நோய்க் கிருமியால் உண்டாகும் ஹாங்காங் சளிக்காய்ச்சல் (இன்ஃபுளுவென்சா). சுவாசக் கோளாறுகள் போன்றவற்றில் நோயின் காலநீட்சியைக் குறைக்கிறது. பார்க்கின்சன் நோயில் நடுக்கத்தையும், விறைப்பையும் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

amastia : மார்பகமின்மை ; முலையின்மை : பிறவியிலேயே மார்பகங்கள் (முலை) இல்லாதிருத்தல். amaurosis : குருட்டுத்தன்மை ; பார்வையின்மை, ஒளியின்மை : பார்வை நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகும் ஓரளவு அல்லது முழுமையான குருட்டுத் தன்மை. amaurotic : குருட்டுத் தன்மையுடையர் : கண்ணின் புறவுறுப்புச் சரியாக இருந்தும் அல்லது கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாதிருந்தும் முழுக்குருடாக இருக்கிற.

ambidexterity : ஒருப்போல் இரு கைத் திறன் : இருகைகளையும் ஒரே விதமாகத் திறம்படப் பயன படுத்தும் திறன்.

39

ambidextrous : ஒருப்போல் இருகைப் பழக்கம்: இருகைச் சமன்திறன் : இருகைகளையும் ஒரே வகையாகத் திறம்படப் பயன் படுத்தக் கூடிய .

ambilhar : அம்பில்கார் : நிரிடா சோல்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

ambivalence : இருமனப்போக்கு விருப்பும் வெறுப்பும் : ஒருவரிடம் ஒரே சமயத்தி எதிர்மாறான இருமுக உணர்ச்சிப் போக்கு இருத்தல் எடுத்துக்காட்டு : அன்பு, பகைமை.

amblyopia : பார்வை மந்தம் மங்கு பார்வை : குருட்டுத்தன்மை யின் அளவுக்குப் பார்வை மந்தமாக இருத்தல். இதனை "புகை பிடிப்போர் குருடு' என்றும் கூறுவர்.

ambulance : நோயாளி ஊர்தி (ஆம்புலன்ஸ்) : நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல் வதற்கான ஊர்தி. இயங்கு மருந்த கம். இயங்கு மருந்தகமாக இருக்கிற ஊர்தி.

ambulatory : ஊர்தி மருத்துவம் : நோயாளிகள் இருக்கும் இடங்களுக்கு நோயாளி ஊர்தியில் சென்று, நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து அவர்களின் முன்னேற்றம் குறித்து மருத்துவமனையின் புறநோயாளர் துறைகளுக்குத் தெரிவித்தல்.

amelia : உறுப்புக் குறைபாடு பிறவி ஊமை; அங்கமின்மை : பிறவியிலேயே உறுப்பு அல்லது உறுப்புகள் இல்லாதிருத்தல். கைகளும், கால்களும் இல்லாதிருந்தால் அது முழு உறுப்புக் குறைபாடு' எனப்படும்.

amelioration : நோய்க் கடுமைக் குறைப்பு: நோய்த்தணிவு : நோய்க் குறிகளின் கடுமையைக் குறைத்தல்