பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

208

எழுத்துச் சீர்மையைக் ேட்டு முகம் சுழிப்பவர்கள், எதிாப்புக் குரல் எழுப்புவர்கள் ஒர் அடிப்படை உண்மையை மறந்து விடு கிறார்கள் அல்லது உணர மறுக்கிறார்கள்.

உயிரும் உடலும் போன்றது ஒலி, வரி வடிவங்கள்

ஒவ்வொரு மொழிக்கும் அடிப்படையாக அமைவது ஒலி வடி வங்கள் ஆகும். இவ்வொலி வடிவை வெளிபடுத்த காட்சி வடிவில் உணர்த்த உருவாக்கப்பட்டவைகளே வரிவடிவங்கள். எனவே, மொழிக்கு உயிர் போன்றது ஒலி வடிவம், உடலின் பல்வேறு அவயங்கள் போன்றவை வரிவடிவங்களாகிய எழுத்துகள் .

தமிழைப் பொருத்தவரை தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் 247 ஒலி வடிவங்கள் உள்ளன. இந்த ஒலி வடிவங்களில் எந்த வித மாற்றமும் திருத்தமும் செய்ய யாரும் இதுவரை முற்படவு மில்லை. அத்தகைய முயற்சியை எந்தத் தமிழனும் ஏற்கப் போவதில்லை. அது கூடவும் கூடாது.

மொழி வேறு; எழுத்து வேறு

எழுத்துச் சீர்மை என்பது மொழியைச் சீர்திருத்துவது அல்ல, மொழியைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள எழுத்து களைச் சீர்மைப்படுத்துவதாகும். மொழி வேறு. எழுத்து வேறு ஒரு மொழியை வேறு எந்த மொழியின் எழுத்துகளாலும் ஒ6 பெயர்ப்பாக எழுதமுடியும். பல்வேறு மொழிகளை ஒரேவிதமான எழுத்துகளிலும் எழுத முடியும். சமஸ்கிருத வரிவடிவமான தேவ நாகரி எழுத்தில் சமஸ்கிருதமும், அறிந்தியும், மராட்டியும் எழுதப்படுகின்றன. அதேபோல ரோமன் வரிவடிவில் ஆங்கில மும் பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளும் மலாய் போன்ற கீழை நாட்டு மொழிகளும் எழுதப்படுகின்றன. இதிலிருந்து ஒலி வடிவ மொழிக்கும் வரிவடிவ எழுத்துக்குமுள்ள வேறுபாடு நன்கு புலப்படும்.

மாற்றமேயன்றி நீக்கமல்ல

தமிழில் 247 ஒடி வடிவங்களை எழுதுவதற்கு மொத்தம் 181 வரி வடிவங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1981ஆம் ஆண்டு முதலே தொடங்கப்பட்ட எழுத்துச் சீர்மை முயற்சியின் விளைவாக பெரியாரால் உருவாக்கப்பட்டு அரசால் ஏற்கப்பட்ட வகையில் 7 எழுத்துகள் குறைந்தன.