பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

121

இருக்க வேண்டிய அடிப்படை அம்சம் பொருளறிவும் மொழி யறிவும் எழுத்தாற்றலுமாகும்.

உண்மைத் தகவல்களை உள்ளது உள்ளபடி கூறுவது அறிவியல், சட்டத் துறைகள். எவ்வித மாற்றமும் இன்றி மொழி பெயர்ப்பு அமைய வேண்டுவது அவசியத்திலும் அவசியமாகும். இவ்வகையான மொழிபெயர்ப்பைத் தகுதி மிக்க மொழிபெயர்ப் பாளர்களே செய்ய முடியும்,

5. மொழியாக்கம்

(Transcreation)

இலக்கிய மொழிபெயர்ப்புக்கு, குறிப்பாகக் கவிதை மொழி பெயர்ப்புக்கு ஏற்ற முறையாக அமைந்திருப்பது மொழியாக்கம்’ எனும் வகையாகும்.

மூல நூல் ஆசிரியனையும் அவன் கையாண்ட கவிதைக் கருவையும் அடியொற்றி அல்லது ஆதாரமாகக் கொண்டு மூல நூலாசிரியன் மொழி, நடை, உத்தி இவற்றை மனதுள் வாங்கிக் கொண்டு, பெயர்ப்பு மொழியின் மரபு, இலக்கண விதி முறை களை அடி யொற்றிச் செய்யப்படும் பெயர்ப்பாகும் இது.

எந்த மொழியில் பெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியின் மரபும் இலக்கணமும் ஆதிக்கம் பெறும் வகையில் இவ்வகை மொழிபெயர்ப்பு அமையும்.

ஒரு ஆங்கிலக் கவிதையை அல்லது வேறு எந்த மொழிக் கவிதையை மொழி பெயர்த்தாலும், அப்பெயர்ப்பைப் படிக்கும் போது, பெயர்ப்பு மொழியில மூலமாக எழுதப்பட்ட நூல் என்று படிப்போரிடையே ஒரு வித உணர்வை இவ்வகை மொழி பெயர்ப்பு எளிதாக ஏற்படுத்திவிடும்.

சில சமயங்களில் இத்தகைய பெயர்ப்புகள் மொழிபெயப்பு’ என்ற கட்டுக்குள் அடங்காமல் போய்விடுததும் உண்டு. தழுவல் எனும் மகுடம் தாங்த நேரிடுவதும் உண்டு.

சுருங்கச் சொன்னால் 'கரு' ஒன்றாகவும் உரு வேறாகவும் இருக்கும் வகையில் மொழி பெயாப்பு அமைந்துவிடும். இம்மொழி பெயர்ப்பு முறையே ஒவ்வொரு மொழியிலும் முதலில் மேற் கொள்ளப்பட்ட முறையாகத் தெரிகிறது. இம்முறையில் அமைந் தவை தமிழ்க் கம்பராமாயணமும் வில்லிபாரதமும் மலையாள மொழி காவியமான எழுத்தச்சனின் பாரதமும் திக்கணரின் தெலுங்கு பாரதமும் துளசிதாசரின் இந்தி இராமாயணமும் ஆகும்.