பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய் இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிருதுவாகி அதில் இரத்தம் கட்டிக் கொள்ளக் கூடும்.

artery : தமனி இதயத்திலிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத்தசைப் பகுதியும், நெகிழ்வுடைய இழை மங்களும், இதயத்திலிருந்து இரத்தம் அழுத்தப்பட்டு வெளியேற்றப்படும் போது விரிவடைவதற்கு அனுமதிச்கிறது புறத்தேயுள்ள திசுப் படலம், தமனி அளவுக்கு மீறி விரிவடைந்துவிடாமல் தடுக்கிறது. இதயத்தின் அருகில் இதன் குழாய் பெரிதாக இருக்கும்; பின்னர் படிப்படியாகச் சிறுத்துச் செல்லும்.

arthralgia : மூட்டுவலி : ஒரு மூட்டில் வீக்கமில்லாமல், ஏற்படும் வலி.

arthritis . மூட்டு வீக்கம், மூட்டு அழற்சி, மூட்டழல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் "கீல் வாதம்' என்றும் கூறுவர் இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் காரணங்களுக்கேற்ப சிகிச்சை முறையும் வேறுபடுகிறது.

arthroclasis மூட்டிணைப்புக் குலைவு. மூட்டு உறுப்புகளை பல விதங்களில் அசைப்பதற்கு உதவும் மூட்டுக் குழியினுள் ஒட்டிணைவு சீர்குலைந்து போதல்.

arthrodesis : மூட்டிறுக்கம், மூட்டு : நீக்கி : அறுவை மருத்துவம் மூலமாக ஒரு மூட்டினை இறுக்க மாக்குதல்

arthrography : மூட்டிணைப்புப் படம்: மூட்டு வரைவியல் : ஒரு மூட்டின் உள் கட்டமைப்பினைக் கண்டறிலதற்காக ஊடுகதிர்ப் படத்தின் மூலம் ஆராய்தல்,

arthrology : மூட்டு இயல் : மூட்டுகளின் - கட்டமைப்பு, செயல்முறை, அவற்றில் உண்டாகும் நோய்கள். அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல்.

arthropathy: மூட்டு நோய் (சூலை) மூட்டு மெலிவு நோய்: மூட்டில் ஏற்படும் ஒரு நோய். இது கடுமையான வயிற்றுப் போக்கினால் (பேதி) உண்டாகிறது

arthroplasty : மூட்டு அறுவை மருத்துவம், முட்டுச் சீரமைப்பு; மூட்டு அமைப்பு : ஒரு மூட்டினை அறுவை மருத்துவம் மூலம் சீர்படுத்துதல்.

arthroscope : மூட்டுக் குழிப்படக் கருவி; மூட்டு அகநோக்கி; மூட்டு உள்காட்டி : ஒரு மூட்டின் குழியின் உட்பகுதியைப் படம் எடுப்பதற்கான ஒரு கருவி.

arthroscopy : மூட்டுக் குழிப் படமெடுத்தல், மூட்டு உள்காண்டல் : ஒரு மூட்டின் குழியின் உட்பகுதியைப் படமாக எடுத்தல்,

arthrosis : மூட்டிணைப்பு ; நலிவு. எலும்பு இணைப்பு: மூட்டு நோய்: ஒரு மூட்டிணைப்பு படிப்படியாக நலிதல.

arthrotomy . மூட்டுத் துளை ; மூட்டு வெட்டு: மூட்டுத் திறப்பு : ஒரு மூட்டினுள் துளையிடுதல்.

articular : மூட்டுக்குரிய மூட்டுச் சார்ந்த: மூட்டு முளை : ஒரு மூட்டு அல்லது மூட்டிணைப்பு தொடர்பான முக்கியமாகக் குருத்தெலும்பு தொடர்பான.