பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

189

மனதுள் உருவாக்கும் உணர்ச்சி, அதன் அடிப்படையில் ஏற் படும் பொருளுணர்திறன். இந்நான்கு தன்மைகளையும் ஒரு சேர உணர்ந்து தெளிவது மொழிபெர்ப்புக்கு இன்றியமையாததாகும். இஃது பொருட்பெயர்ப்பு சிறப்பாக அமைய பெருந்துணையாகும்.

மூல மொழியிலும் துறையறிவிலும் குறைபாடுடையவர்கள் மொழி பெயக்கத் தொடங்கின், தாங்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டார்களோ அந்த அளவுக்குத்தான் கொழி பெயர்க்க முடியும். இதனால் பொருட் சிதைவு கருத்துப் பிறழ்வு ஏற்படுவதோடு, சில சமயம் மூலத்தின் கருத்துக்கு முரணாக, மொழிபெயர்ப்பாளனுடைய சொந்தக் கருத்தும் இடம் பெற நேரலாம். இதனால் விளையும் பொருள் விபரீதம் பெருங் கேட்டிற்கு வழிகோலலாம்.

பொருட் பிறழ்வால் அணுகுண்டுவீச்சு

உலகையே குலுக்கிய ஜப்பான் அணுகுண்டு வீச்சுக்கு மூல காரணமே, மொழிபெயர்ப்பாளரின் பொருட் பிறழ்வான மொழி பெயர்ப்பே என்பது நமக்கெல்லாம் வியப்பூட்டும் செய்தியாகும்.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் நடை பெற்ற போட்ஸ்டாம் மாநாட்டிற்குப் பின்னர், அமெரிக்க அரசு ஜப்பான் அரசை சரணடையுமாறு கோரி இறுதி எச்சரிக்கை (Ultimatum) siguüiaugu. இந்த இறுதி எச்சரிக்கையைப் பெற்ற ப்ேபா ய அரசு உடனடியாக பதில் அனுப்பியது. அப்பதிலில் மோகு ஸ்ட்ஸ் என்ற ஜப்பானிய சொல் பயன்படுத்தப் பட்டிருந்தது.

'உங்கள் இறுதி எச்சரிக்கையை பரிசீலனை செய்கிறோம். பதில் தரத் தாமதமாகும்' எனப் பொருள்தரும் வகையில் இந்த ஜப் னியச் சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்கத் தலைநகரான வாஷிங்ட னில் இச்சொல்லை மொழி பெயர்த்தவர்கள் பொருட் பிறழ்வாக உங்கள் இறுதி எச்சரிக் கையை நிராகரிக்கிறோம்’ என மொழிபெயர்த்து ஜனாதிபதிக் குக் கொடுத்து விட்டார்கள். இதன் விளைவாக நாகசாகியிலும் ஹிரோஷிமாவிலும் அணுகுண்டு போட வெள்ளை மாளிகை ஆணை பிறப்பித்து விட்டது. இவ்வாறு ஜப்பானிய இரு பெரும் நகரங்கள் அணுகுண்டு வீச்சால் அழிய, பொருட் பிறழ்வாக மொழிபெயர்ப்புச் செய்த மொழி பெயர்ப்பாளர்களே காரண மாக அமைந்து விட்டார்கள்.

இதனாலேயே இத்தகைய அறைகுறை மொழிபெயர்ப்பாளர் களை மூல ஆசிரியனுக்குத் துரோகமிழைப்பவர்கள்’ என்ற