பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

84

தமிழும் காலப்போக்கிற்கேற்ப ஒழுக்க நெறியையும் நீதியை யும் கூறும் அறநெறித் தமிழாகவும் தோற்றம் பெறத் தொடங் கியது.

கதைவழி அறநெறி

காலப்போக்கில் இலக்கியத்தில் மேலும் மாற்றங்கள் ஏற் படவே செய்தன.

நீதிகளை அறநெறிகளை-சமயத் தத்துவ நுட்பங்களை வரட்டுத்தனமான சுவையற்ற பாடல்கள் மூலம் கூறுவதைக் காட்டிலும் கதை மூலமாக, கதாபாத்திரங்கள் வாயிலாக, இலை மறை காயாக, எளிதாகக் கூறி மக்களின் உள்ளங்களில் அழுத்த மாக நிலைபெறச் செய்யும் புதுவகையான உத்தியைத் தமிழில் தொடங்கி வைத்தவர் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ வடிகளாவர்.

சிலப்பதிகாரத்தின் பதிகத்தில்,

"அரைசியல் பிழைத்தோர் கறங் கூற்றாத லு உரைசால் பத்தினிக்குயர்ந்தோ ரேற்றலும் ஊழ்வினை உறுத்து வந்து ட்டும் என்பதும்

நாட்டுதும் யாமோர் பாட்டுடை ச் செய்யுள்" எனச் சீத்தலைச் சாத்தனார் கூறியதாகக் கூறப்படுகிறது.

இளங்கோவடிகளே நேரடியாகத் தம் காப்பியத்தின் இறுதியில் தன் விருப்பமாக,

'தெளிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்'

எனக் கூறுகிறார். இத்தகைய காப்பியங்கள் எழ நேர்ந்ததும் காலத்தின் ஒருவகைக் கட்டாயமே எனலாம்.

தமிழுருவில் சமஸ்கிருத இலக்கியங்கள்

சங்க காலத்திலேயே வைதிக சமயத்தின் வருகையின் காரணமாக வடமொழியான சமஸ்கிருதத்தின் தொடர்பு தமிழுக்குக் கிட்டியது. வடபுலத்தில் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டிருந்த இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பி யங்களைப் பற்றிய செய்திகள் பரவவே, தமிழிலும் இக்காப்பிய நிகழ்ச்சிகளைப் பற்றிய பாடல்கள் தமிழ்ப் புலவர்களால் இயற் றப்பட்டதாகத் தெரிகிறது. அவை இன்று கிடைக்கப் பெற