பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89

பட்டு வெளிவருகின்றன. அவைகள் மூலக்கதைகள் போன்ற பிரமையைப் படிப்போரிடையே ஏற்படுத்திவருவது அவைகளை எழுதிய அறிவியல் புனைகதை எழுத்தாளர்களின் திறமைக்குக் கிடைத்த பரிசாகும் இவ்வாறு உருவாகி வெளிவந்த அறிவியல் சிறுகதைகள், நெடுங் கதைகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன.

மேனாட்டுப் படைப்புகளோடு ஒப்பிடும்போது அறிவியல் புனைகதைகளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையே இன்னும் எழுத்தாளர்களின் உள் ளத்தில் அழுந்தப் பதிய வில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. முயன்றவர்களின் முயற்சிக்கும் போதிய ஆதரவில்லை என்ற கருத்தும் பரவலாக

இருந்து வருகிறது.

தமிழில் அறிவியல் கதை எழுதும் எழுத்தாளர்களின் முன்

முயற்சி செய்தவர்கள் என்ற வரிசையில் சுஜாதா, மாலன்,

சுப்ரபாலன் போன்ற சில எழுத்தாளர்கனைக் குறிப்பிடலாம்.

சுவையாகக் கதை சொல்வதில் தனித்திறன் பெற்ற எழுதி தாளர் எனக் கருதப்படும் சுஜாதா தொடகத்தில் அறிவியல் புனைகதை எழுத்தாளராக அறிமுகம் ஆகியபோது, அவரிடம் இத்துறையில் மிக அதிகமாக எதிர்ப்பார்க்கப்பட்டது என் னவோ உண்மைதான். ஆனால், அவர் துப்பறியும் துறை போன்றவற்றை நோக்கித் தன் எழுதுகோலை நகர்த்தியவுடன் அந்த எதிர்பார்ப்பும் குறைத்து விட்டது. மாலன் போன்றவர் களிடம் அத்திறமை அதிகம் இருப்பதால் இன்னும் அந்த நம்பிக்கை இருந்தே வருகிறது. அறிவியல் புனைகதை வளர்ச்சி இன்மைக்கு யார் காரணம்?

இத்தகைய அறிவியல் புனைகதைகள் பெருமளவுக்கு வெளிப்படாமைக்கு கதைகளை வெளியிடும் இதழ்களும் அவற் நின் போக்கிற்கேற்ப நகர்த்து கொண்டிருக்கும் வாசகர்களுமே காரணமாவார்கள் எனக் கருத வேண்டியுள்ளது

கதை இலக்கியங்களை வெளியிடும் பத்திரிகைகளில் பெரும் பாலானவை இலாப நோக்சத்திற்காக மட்டுமே தடத்தப்பெறு வன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். வெளியிடும் கதைப் படைப்பு ஸ் மூலம் மக்களின் அறிலை வளர்ப்பதோ, அவர்களை விஞ்ஞானபூர்வமாகச் சித்திக்கத் தூண்டுவதோ அல்லது அவர்களிடையே சமுதாய விழிப்புணர்வை ஊட்டு வதோ அல்ல. படிக்கும் வாசகர்களின் உணர்ச்சிக்கு இசை போட்டுத் தங்கள் விற்பனையைம் பெருக்கி, பணப்பெட்டியை திரப்புவதே அவற்றின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.