பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79

இலக்கிய படைப்பு போன்ற பலவித இலக்கிய வடிவங்கள் தமிழில அமையத் தூண்டுகோலாக மட்டுமின்றி ராஜபாட்டை அமைத்துத் தந்த பெருமை கிருத்துவ சமயத்தைச் சார்ந்த தமிழ்ப் புலவர்களுக்கு உண்டு. அவர்களின் முன்னோடிப் பணிகளே இக்காலத் தமிழ் இலக்கியத்தின் அடித்தளப் பணிகள் என்பதில் ஐயமிலலை.

தமிழ் நாட்டிற்கு ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர் டேனிஷ்காரர்கள் என எத்தனையோ நாட்டினர் வணிக நிமித்த மும் நாடாளும் நோக்கோடும் வந்த போதிலும் ஆங்கிலேயர் களே நாட்டின் பெரும் பகுதிகளை ஆளும் வாய்ப்பைப் பெற்ற னர். அவர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்பியது போன்றே தாங் கள் சார்ந்திருந்த கிருத்துவ சமயத்தையும் பரப்பும் பணியை மேற்கொண்டனர்.

ஆங்கில மொழியறியாத தமிழர்களிடையே தமிழ் மொழி வழியே சமயப் பிரச்சாரம் செய்ய, கிருத்துவப் பாதிரியார்கள் தமிழைக் கற்க முனைந்தனர். தமிழின் இனிமையிலும் தமிழ் இலக்கிய இன் பத்திலும் உள்ளத்தைப் பறிகொடுத்த பாதிரிமார் களில் பலர் கிருத்துவத் தொண்டர்களாகத் திகழ்ந்தார்களோ இல்லையோ தமிழ்த் தொண்டர்களாகத் தங்களை உருமாற்றிக் கொள்ளத் தவறவில்லை.

கிருத்துவ சமயக் கருத்துக்களை தமிழிலே பாடல்களாகவும் உரைநடையாகவும் கதை இலக்கியங்களாகவும் உருவாக்கி நடமாட விட்டனர், இதன் மூலம் சமயமும் பரவியது. தமிழும் வளமும் வலுவும் பெற்றது.

உரைநடை வளர்ச்சிக்கான உந்துவிசை

ஐரோப்பாவிலிருந்து வந்த பாதிரிகள் தங்கள் நாட்டில் பெரு வழக்கிலிருந்த இலக்கிய வடிவங்களை அப்படியே தமிழில் தந்து தங்கள் பணியை நிறைவேற்ற விழைந்தனர். அவற்றில் குறிப் பிடத்தக்க வகை உரைநடை இலக்கியமாகும்.

ஐரோப்பியக் கிருத்துவர்கள் தமிழகம் வரும்வரை தமிழில் தனியே உரைநடை நூல்கள் என்று ஏதுமில்லை. அனைத்துச் சமய நூல்களும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. சிலப் பதிகாரம் முதலே தமிழில் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்ற வகையில் உரைநடை ஆங்காங்கே செய்யுளை அடுத்து வந்தனவே தவிர, தனியே உரைநடை வடிவிலான இலக்கிய நூல்கள் ஏதுமில்லை.