பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

5. கடவுள் கடவுளென்று

கதறுகின்ற கயவர்காள்!

'மனிதனது கற்பனைகளில் மகத்தானது கடவுள் ஆகும்' என்பது உலகத்தின் சிறந்த சிந்தனையாளனான இங்கர்சாவின் கூற்று. அது தான் உண்மையும் கூட,

தனது வாழ்வின் தன்மையை உணர இயலாத மனிதன், நிலையற்ற எதிர்காலத்தையும் வலி மிகுந்த இயற்கைச் சக்திகளையும் எண்ணி அஞ்சிய மனிதன், தனது மன அரிப்பை அடக்க ஒரு போதையின் உதவியை நாடினான். உண்மையை மறக்கடித்து மயக்க நிலையிலே தள்ளுகிற அந்த போதைதான் கடவுள் நினைப்பு.

'எல்லாம் கடவுள் செயல்' என்று கடவுள் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு பயமில்லாமல் வாழலாமோ! அதற்குத் தான். முதலில், தங்களை விட வலிய சக்திகளை எல்லாம் அவை மிருகங்களாயினும் சரி, ஊர்கின்ற ஜந்துக்களாயினும் சரி-கடவுள் என்ன விழுந்து கும்பிட்டான். நாகத்தையும், சிங்கத்தையும் கும்பிட்டது போலவே, அழிக்கும் தன்மை பெற்ற தீயையும் தண்ணீரையும் பிறவற்றையும் அஞ்சி வணங்கினான். அடுத்தவன் செத்ததைக் கண்டதும் ஏற்பட்ட அச்சத்தால், தான் சாகாமலிருப்பதற்காக மரணத்துக்கு ஒரு தெய்வம் என நியமித்தான் அதாவாது, ஆதிமனிதன் எண்ணப்படி, அவன் அறிய எல்லைக்கு அப்பாற்பட்டதெல்லாம், அவனால் புரிந்து கொள்ள முடியாத அமானுஷிக சக்தி எல்லாம் கடவுள் தன்மை பெற்றவை ஆயின.