பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கிற பத்திரிகைகளில் தினமணி பரவாயில்லை

என்று சொல்லலாம்.

எல்லாப் பத்திரிகைகளும் மத்திய தர மற்றும் உயர்தர வர்க்கத்திர்ை - அதிகம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் - உபயோகத்துக்காகவே இருக்கின்றன. சிறிதளவு படிப்பறிவு உள்ளவர்கள், தெருவில் போகிற சாதாரண வாசகர்கள், தெளிவாகச் சொன்னால், ரிக்ஷாக்காரர்கள் கூட - படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் செய்திகளைத் தருகிற பத்திரிகை ஒன்று கூட இல்லை. அப்படி ஒரு தினத்தாள் தேவை. இந்த எண்ணம் 'தமிழ் ராஜ்ஜியம் அமைக்க ஆசைப்பட்ட சி. பா. ஆதித்தனின் தீர்மானமாக

அமைத்தது.

அந்த நோக்குடன் அவர் தந்தி’ பத்திரிகையை ஆரம்பித்தார். சிறிது காலத்துக்குப் பிறகு அதன் பெயரை 'தினத் தந்தி' என்று ஆக்கினார். அவருடைய ஆற்றலும் அனுபவமும் 'தினத் தந்தி க்கு நல்ல வெற்றியைக் கொண்டு தந்தன. அது ஜனரஞ்சகப் பத்திரிகையாக வேக வளர்ச்சி பெற்றது.

'தினமணி' யின் ஆசிரியராக இருந்து அதை நன்கு வளர்த்த டி. எஸ். சொக்கலிங்கமும், அவருக்குத் துணையாகச் சேர்ந்து உழைத்த அநேக திறமைசாலிகளும், நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற நேர்ந்தது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 82