பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு பேரும் வட்டமாக உட்காருவது, ஒருவர் புத்தகத்தை உரக்க வாசிக்க வேண்டும். மற்றவர்கள் கேட்டு ரசிக்க முடியும் அல்லவா? கேள்வி ஞானம்’ போதுமே நாவலை ரசிப்பதற்கு!

ஆமாம். அவர்கள் படிக்கத் துடித்தது விறுவிறுப்பான ஒரு நாவல் தான். வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய 'பூசண சந்திரோதயம்’.

அது மிகப் பெரிய நாவல். ஐந்து பாகங்கள் கொண்டது. சி. டபிள்யூ. எம். ரெய்னால்ட்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 'தி மிஸ்டரீஸ் இன் தி கோர்ட் ஆஃப் லண்டன்’ என்ற நாவலைத் தழுவி, தமிழ் நாட்டுச் சூழ்திலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்திருந்த பெரியவர்கள், சின்னப் பையனாக - அதிலும் பள்ளிக்கூடத்திலே படிக்கிறவங்கஇது மாதிரி நாவல்கள் எல்லாம் படிக்கக் கூடாது” என்று கண்டிப்பான தடை உத்தரவு போடுவது வழக்கம்.

எத்தப் பையனாவது அது போன்ற நாவலை வீட்டில் வைத்துப் படித்தான் என்றால், அதை

அப்பாவோ மண்மாவோ அல்லது பொறுப்புள்ள பெரியவர் எவரோ கண்டு விட்டார் என்றால், ஆபத்துதான்.

படக்கென்று புத்தகத்தைப் பிடுங்கி வெளியே விட்டெறிவார். ஆத்திரத்தோடு கிழித்துப் போடவும் கூடும். பையனுக்கும் பூசைக் காப்பு கிடைக்கும்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 2