பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனப்போராட்டங்களையும் இதர சிக்கல்களையும் மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் ஆழமாகவும் கவனமாகவும் எழுத்தில் சித்தரிக்கிற இலக்கியப் போக்கு அது.

இந்தப் போக்கைப் பின்பற்றும் மனம் கொண்ட சில எழுத்தாளர்களின் படைப்பு முயற்சிகளுக்கு ‘மணிக்கொடி அரங்கம் அமைத்துக் கொடுத்தது. வாரப் பத்திரிகையாக நடைபெற்று, வியாபார வெற்றிஅடையாமல் போன 'மணிக்கொடி’ சிறுகதைப் பத்திரிகையாக புத்தக வடிவத்தில் மறுமலர்ச்சி பெற்று வெளிவந்தது. பி. எஸ். ராமையா அதன் ஆசிரியர்.

தமிழ் சிறுகதையை உலக இலக்கியத்தின் தரத்துக்கு உயர்த்தி, நம் மொழியை வளம் உள்ளதாக்க வேண்டும் என்ற இலட்சிய வேகத்தோடு சிறுகதைகள் எழுதிய புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்ச மூர்த்தி, சி. சு. செல்லப்பா ,சிட்டி பெ.கோ. சுந்தரராஜன் மெளனி முதலியவர்கள் படைப்புகள் அந்த மாதம் இரு முறை வெளியீட்டில் வந்தன. புதுமையான எழுத்து முயற்சிகள் அதிகம் இடம் பெற்றன.

அந்தப் பத்திரிகையைத் தேடி வாங்கிப் படித்து ரசித்து; இதழ்களைப் பாதுகாத்து வைக்கிற வாசகர்கள் தமிழ் நாட்டில் அங்கும் இங்குமாகச் சிலர் இருந்தார்கள். எனினும், மணிக்கொடி யை எதிர்பார்த்து வாங்கி விரும்பிப் படித்த வாசகர்கள் சில நூறு பேர்களேயாவர். அந்த இலக்கியப் பத்திரிகை ஆயிரம் பிரதிகளுக்கு அதிகமான விற்பனையை எட்டிப்பிடிக்க முடிந்ததில்லை.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 21