பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாணயம் - இது கள்ள நாணயம் என்று கண்டு உணரும் திறமைசாலிகளைப் போல, தாமும் கவிதை களைச் சுண்டிப் பார்த்து, தமது ரசனைத் திறத்தால் - நல்ல கவிதையை உணர்ந்து ரசிக்கக் கூடிய தம் உள்ளப் பண்பினால் - உண்மையான கவிதை எது, போலியானது

எது என்று கண்டுபிடிப்பதாக அவர் சொன்னார்.

டி. கே. சி. தமது இஷ்டம் போல் ராமாயணப் பாடல்களைத் திருத்தி வேறு சொற்களை இணைத்ததும் ஒரு விதத்தில் இடைச்செருகல் தான். வெவ்வேறு காலங்களில் இடைச்செருகலாக க் கவிதைகளைத் திருத்தியவர்களும். சொந்தப் பாடல்களைச் சேர்த்து எழுதியவர்களும் கூட இப்படி ஏதாவது காரணங்கள் சொல்லித்தான் செயலாற்றியிருந்திருப்பார்கள்.

இருந்தபோதிலும், டி. கே. சி. கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு இலக்கிய விமர்சகராகவும், அவருடைய விமர்சன முறை ரசனை அடிப்படையில் அமைந்தது என்றும் மதிக்கப்படுகிறார். அவர் கவிதையின் ஜீவனைக் கண்டு உணர்ந்தார்; உண்மையான கவிதையை எப்படி ரசிக்க வேண்டும் என்று இலக்கிய நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்; அவரை அணுகியவர்க்கெல்லாம். அவர்கள் சாதாரணர்களாயினும் சரி, அதிகம் படித்தவர் களானாலும் சரியே - கவிதை நயங்களை எடுத்துக்கூறி, நயங்களை எளிதில் புரிந்து கொள்ளும்படி விளக்கி, இலக்கிய விருந்து அளித்தார். -

டி. கே. சி. செய்து வந்த இத்தமிழ்ப் பணி . இலக்கியப் பணி - போற்றுதலுக்கு உரியது தான்.

வாசகர்களும் விமர்சகர்களும் 146