பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே தான் அவற்றுக்கு வரவேற்பு பெரும் அளவில் கிட்டுகிறது.

மனித மன இயல்புகளையும் பலவீனங்களையும் ருசிகளையும் நன்றாகப் புரிந்து கொண்டு - சரியாகக் கணித்து - திட்டமிட்டுச் செயலில் ஈடுபடுகிற வணிக தோக்குப் பத்திரிகைக்காரர்கள் தொழில் .ெ வ ற் றி அடைகிறார்கள். வாசகர்கள் அவர்களை ஏமாற்றுவது

வாசகர்கனின் தரம் உயர்வதற்கான வழிவகைளைச் செய்ய வேண்டும்; தரம் உயர்ந்த வாசகர்களின் அறிவுப் பசிக்கும் சிந்தனை வேகத்துக்கும் புதுமை வேட்கைக்கும் திருப்தி தரக்கூடிய விதத்தில் உலகத்து அற்புதங்களை எல்லாம் தமிழில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நினைப்பு, லாபத்திலேயே குறியாக வணிக நோக்குடன் பத்திரிகைகள் நடத்துகிற பண அதிபர்களுக்கு சிறிதளவு

கூட எழாது.

வாசகர்களை மயக்க நிலையிலேயே இருக்க வைத்து, அவர்களது அறிவையும் சிந்தனைத் திறனையும் மழுங்கடித்து, தாங்கள் கொடுக்கிற சரக்குகளை வாங்கி நுகரும்படி செய்வதில் கருத்தாக இருப்பவர்களே பத்திரிகைத் தொழில் அதிபர்கள்.

இவ்விஷயம் குறித்து "எ ழு த் த | ள ர்க ள் பத்திரிகைகள் - அன்றும் இன்றும் என்ற புத்தகத்தில் விரிவாகவே கூறப்பட்டுள்ளது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 106