பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கியம் செழுமை பெறுவதற்கு "சரஸ்வதி பெரிதும் உதவியுள்ளது. திறமை நிறைந்த படைப்பாளிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி வாசகர்களின் கவனிப்பைப் பெற்று வளர்ச்சியடைவதற்கும் அது துணை புரிந்தது. புதுமையான சிறுகதைகள், சிந்தனைக் கட்டுரைகள், தத்துவ விளக்கங்கள், நூல் விமர்சனங்கள், அயல் நாட்டு நாவல்களின் சுருக்கங்கள், இலக்கிய விவாதங்கள் என்று பல வகைகளிலும் சரஸ்வதி சாதனை புரிந்து தனக்கெனத் தனி இடம் பெற்றிருக்கிறது"

சரஸ்வதியில் வெளிவந்த சிறந்த படைப்பு களை தொகுத்து சரஸ்வதி களஞ்சியம் என்று நண்பர் விஜயப்ாஸ்கரன் சென்ற ஆண்டில் (2001) வெளியிட்டார். அதற்கு அணிந்துரை வழங்கிய திரு.வல்லிக் கண்ணன் சரஸ்வதியின் சாதனைகளைப் ப்ட்டியலிட்டுள்ளார். சரஸ்வதி: ஆரோக்கியமான இலக்கிய விவாதங்களை வளர்த்தது, என்றும் சுவாரசியமான சர்ச்சை களுக்கு இடம் அளித்தது என்றும் கூறியுள்ளார். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், மகாகவி பாரதி பற்றியும், சிறுகதை சாம்ராட் புதுமைப்பித்தன் பற்றியும் விவாதிக்க "சரஸ்வதி'யில் விவாத மேடை அமைத்துத் தந்தார். திரு.விஜயபாஸ்கரன். அதில் முற்போக்கு எழுத்தாளர்கள் பங்கு பெற்றனர். பாரதி பற்றிய கட்டுரைத்தொகுப்பை நாம் வெளியிட்டோம்.

புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரைத் தொகுப்பை என்.சி.பி.எச். வெளியிட்டது. "சரஸ்வதி யில் வந்த சாமி சிதம்பரனார்

திரு. எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளை வெளியிடத்திட்டமிட்டுள்ளோம்.

'சரஸ்வதி இதழ்களை பிரதிகள் எடுத்து கொள்ள வசதிசெய்து கொடுத்து அதன் முக்கிய