பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{32_圈_靈 உயர்ந்தவன் | பையன் தலையிலே களிமண்ணு தான் இருக்குது என்று ஒரு ஐயா சொல்லி விட்டாரு. மேல்மாடி காலி என்கிறாரு ஒருத்தரு. சுட்டுப் பொசுக்கினாலும் படிப்பு வராது என்று பெரிய ஐயா சொன்னாரு அவங்க எல்லோருமே சோம்பேறிகதான். என் துரைராசா நல்ல புத்திசாலி ஆச்சுதே அவனுக்கு விளையாட்டுத்தனம் அதிகம். அதனாலே தான் படிப்பிலே கவனமில்லை. கவனம் வைத்து அக்கறையோடு படித்தான் என்றால் அவனை யாரும் மிஞ்ச முடியுமா?" என்று அவள் சொன்னாள். தன் மகனைப் பற்றி வேறு விதமாகப் பேச பெற்ற மனசு இடம் கொடுக்குமா?

பார்வதியின் "ராசா' வான செல்லையா "அவிழ்த்து விட்ட கழுதை" மாதிரி அலையும் சுதந்திரம் பெற்றுவிட்டான். அவனுடைய "கீர்த்தி எங்கும் பரவியது. பாடப் புத்தக விஷயத்தில்தான் அவன் மூளை தடிமன் பெற்றிருந்ததே தவிர, வயிற்றுப் பாடு என்கிற பிரச்னை வரும்பொழுது "ரொம்ப சூட்டிக்கமாக"த் தான் வேலைசெய்து வந்தது. அப்படி வேலைத்தனங்கள் செய்து அகப்பட நேரிட்டால், எளிதில் தப்பி விடுவதற்கு உரிய உபாயங்களையும் ஒரு கணத்தில் கண்டுவிடும் சக்தி அதற்கு இருந்தது. அட தப்பித் தவறி அடியும் உதையும் பெற நேர்ந்தது என்றாகிவிட்டால் தான் என்ன? "தோலுக்கு மேலே தொண்ணுறு அடி துடைத்து விட்டால் ஒண்ணுமில்லே!" என்று சுட்டிக்காட்டக்கூடிய "பரிபூரணானந்த பக்குவம் அதற்கு இருந்தது.

பார்வதி தான் கண்ணிர் வடித்தாள். தனது ராசாவின் மேனியில் கசிந்து பொறுக்கிட்டிருக்கும் ரத்தக் கறைகளைக் காணும்போது அத் தாயின் உள்ளம் வேதனையோடு ரத்தம் கக்கும், "அடே ஏண்டா இந்த வரத்து வருகிறே? நல்லவன்னு பெயரெடுத்து நீ நாலு பேரு மதிக்க வாழனுமின்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன் என் எண்ணத்திலே மண்ணைப் போட்டுவிட்டையேடா ராசா" என்று வயிற்றெரிச்சல் தாங்காமல் புலம்பினாள் தாய்.

"இப்போ எனக்கு என்னம்மா குறை? நாலு பேரு மதிச்சு நமக்கு என்ன ஆகப் போகுது?" என்று கேட்டான் பையன். y

சர்வ சமய சஞ்சீவியான பழமொழிதான் பார்வதி அம்மாளுக்கும்

புகல் அளிப்பது வழக்கம். இந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு பழமொழி தான் அவளுக்கு ஆறுதல் கூறியது ஊம் என்னாலே என்னடா செய்ய