பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

அவளுக்கிருந்த இளகிய மனசு அவளுடைய பெருந் தன்மையின் மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று தான் பலரும் சொன்னார்கள்.

"நம்ம பெரிய வீட்டு மீனாட்சிக்கு இருக்கிற தங்கமான மனசு வேறு யாருக்குமே இருக்க முடியாது. துன்பத்தைக் கண்டு சகிக்க முடியாது அவளாலே. இன்னொருத்தர் காலில் முள் தைத்துவிட்டால் அவளுக்குத் தனது கண்ணிலே குத்திவிட்டது போல் களகளவென்று கண்ணிர் வடித்து விடுவாள். அப்பாவி" இது அம்மாளை அறிந்த ஒரு அம்மையாரின் அபிப்பிராயம்.

"இதைப்போயி பெரிசாச் சொல்லுறியே அன்னைக்கொரு நாள் நான் மீனாட்சியைப் பார்க்கப்போனேன் பாரு, அப்ப அவள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். நான் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன். பிறகு அவளைத்தேற்றி விசாரிச்சதிலே விஷயம் புரிஞ்சது. அவள் ஒரு புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருந்தாளாம். அதிலே உள்ள கதாநாயகிக்கு ஏகப்பட்ட கஷ்டமும் துன்பமும் வந்து அவள் வேதனைப்படுகிறாள். அதனாலே மீனாட்சிக்கு மனசு குழம்பி சோகம் முட்டி அழுகை வந்துவிட்டது. ஐயோ பாவம் என்று நீட்டி நீட்டிப் பேசினாள் பார்வதி என்றொரு அம்மாள்.

அவள் பேச்சு பொய் அல்ல. மீனாட்சியின் குணவிசித்திரங்களில் அதுவும் ஒன்று தான்.

பொழுதுபோக்கிற்காகக் கதை படிக்கிற மீனாட்சி அம்மாள். தான் படித்துக் கொண்டிருப்பது கதை என்பதை மறந்தே விடுவாள். கதா பாத்திரங்கள் அனுபவிக்கிற கொடுமைகள் அவள் உள்ளத்தைத் தொடும் உணர்வைக் கிளுகிளுக்கச் செய்யும். கண்ணின் மணிகள் நீரிலே மிதக்கும். அப்புறம் கண்ணீர் பெருகி ஓடவேண்டியது தானே!

கலியாணம் ஆகாமல் ஏக்கமடைந்து "என்று வருவானோ? என

மனம் குமைந்து புழுங்குகிற கன்னிப் பெண்களின் நிலைமை அவளுக்கு வேதனை தரும். கணவனை இழந்து வாழ்க்கை வெயிலி ல் வாடி வதங்கும்இளம் விதவையின் துயரம் அவள் உள்ளத்தில் பெருத்த துக்கத்தை எழுப்பும். மாற்றாந் தாயின் கொடுமைக்கு இலக்காகும் சிறு பிள்ளைகள், ஏழை எளியவர்கள், பொதுவாக எல்லோருடைய வேதனையும் தான் அவளைக் கண்கலங்க வைத்துவிடும். கதைகளைப் படிக்கறபோது தான்