பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

எஞ் சிவனே, என் மனப்பேய் இவ்விதம் என்னென்ன சித்து விளையாடல்கள் புரிந்துவந்திருக்கிறது என்பது உமக்கு எப்படித் தெரியும்? - -

சாயங்கால நேரம்தான். வாழ்ந்து அலுத்துப்போன பகல் பொழுது, நோய் முற்றி ரத்தம் கக்கிக்கொண்டு படுக்கையில் ஒய்ந்துகிடக்கிற காச நோய்க்காரன்போல், மேல்திசைச் செக்கர் வானத்தில் தொங்கிக் கிடக்கிறது. அப்பொழுதும் நான் ரயிலில்தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் இது வேறு திசையில். இது வேறு பிரயாணம்.

சூழ்நிலையும் வேறுதான். ஆனாலும் இங்கும் மலைகளும் மரங்களும் உண்டு. சுற்றிவர மலை. மரங்கள், காடுமாதிரி. ஆனால் நிஜமான காடு இல்லை. அவற்றிடையே ஒரு ஸ்டேஷன், ரயில் நின்று புறப்பட்டது. மலையிைன் உச்சியில் சூரிய ஒளி பூசியிருந்த விந்தைக் கோலத்தை வியந்து கொண்டிருந்த என் கண்கள் வண்டிக்குள் திரும்பின. அங்கே கதவோரத்தில் ஒரு இளம்பெண் என்னையே பார்த்தபடி நின்றாள். என் உடல் சிலிர்த்தது.

என்ன உருவம் நன்கு விளைந்த முள்ளங்கிக் கிழங்குமாதிரி. மேனி முழுவதும் ஒரு மினுமினுப்பு நாட்டுப்புறம் அதனால உடல் வளத்தைப் பகட்டுத் துணிகளுக்குள் மூடிவைத்திருக்கவில்லை. சாதாரணமான ஒரு சீலைதான். முகம் அந்த விழிகள். மதமதர்த்த கண்களில் தேங்கி நின்ற பார்வை வெற்றிலைச் சிவப்போடு வெடித்து நின்ற உதடுகளின் கோணத்திலே சிறு சிரிப்பு தங்கி நிற்கிறதா என்ன?

என் மனம் நடுங்கியது. சந்தேகமேயில்லை. மோகினிப் பிசாசுதான்.மோகினி வேலைக்காரப் பெண்மாதிரியும், பிச்சைக்காரி போலவும் வந்து அனுதாபத்தைப் பெற்று. கூடவே வந்து வீட்டில் தங்கியிருந்து, தருணம் பார்த்து ஆளையே அடித்து ரத்தத்தைக் குடித்துவிட்டு மறைந்து போவதுபற்றி கிராமங்களில் பலரும் சொல்லி யிருக்கிறார்களே. நான்கூட அப்படிச் சில கதைகள் எழுதியிருக்கிறேனே! - -

அந்தப் பெட்டியில் அதிகமாக ஆட்கள் இல்லை. நாலைந்து பேர்தான் இருந்தோம். மற்றவர்கள் பார்வையில் படாத ஒரு இடத்தில் - கதவருகில், நின்று அவள் என்னையே முழித்துக் கொண்டிருந்தாள். எனக்குச் சந்தேகமேயில்லை. அவள் ம்ோகினிதான்