பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 1 #5

வீடு இடிந்து என்மேல் விழுகிறது-பிரமை, வானம் கறுத்து, ஆகாச வெளியிலே நெளியும் ஒளிப் பாம்புகளென மின்னல் கிறுக்கிச் சிரிக்கையில், இடி இடிக்கிறபோது என் தேகம் நடுங்குகிறது. மின்னொளியால் என் கண் பார்வை போய்விடுகிறது. நான் என்ன செய்வேன் என்று உள்ளம் பதைக்கும். சட்டுச்சட சடக்கும் இடி என்மேலே விழுகிறது. வீதியில் எனக்கு விபத்து. ஒரு கை போய்விட்டது.இன்னொரு சமயம் கால் போய்விடுகிறது. அட கடவுளே, உயிர் வாழ்வதில் இன்பமே இல்லை. இல்லவே இல்லை!

நான்தான் சொன்னேனே-இது ஒரு நோய்த்ான். அல்லது பைத்தியத்தின் விளிம்பிலே என் சித்தம் தத்தளித்துத் தடுமாறிக் கெண்டிருக்கிறதோ என்னவோ!

நான் பெரிய வீதிகளின் ஒரு ஓரத்தில், வீதியைத் தாண்டாமலும் ஒரமாக நடந்தே போகாமலும், மணிக்கணக்கில் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறவர்கள் வேலையற்ற வீணன் என்றுதான் எண்ணிச் செல்வர் என் மன அரங்கிலே எவ்வளவு குழப்பம் உருவாகி உருவாகி அழிகிறது என்பதை அவர்கள் எப்படி அறிய முடியும்? -

இப்பொழுதுகூட விசாலமான தெற்குக் கடற்கரை ரஸ்தாவின் வலது பக்கத்திலே அரைமணி நேரமாக நான் ஏன் நின்றுகொண்டிருக்கிறேன் என்று விசாரிப்பதற்காகத் தானே நீர் என் அருகில் வந்தீர்? நல்லது நண்பரே, உம்மிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேனே.

பெரிய ரஸ்தாக்களைக் கடந்து போவதற்குள். எனக்கு உயிர் போய் உயிர் வந்துவிடுகிறது. ஆமாம். அப்படித்தான் சொல்ல வேண்டும். ரஸ்தாவைத் தாண்டுவதற்கு முந்தியே என் மனம் சஞ்சலப்படுகிறது. பெண்டாட்டி வீட்டில் நெருப்புப் பற்றிக்கொண்டது போலவும் அதை அணைக்க வாயு வேகம் மனோவேகமாக ஓடுவது போலவும் மோட்டார் பைக்கில் விரைகிறார்களே பலர் நீர் கவனித்த தில்லையா? நான் ரஸ்தாவைக் கடக்கிற சமயத்தில், அப்படி ஒரு மோட்டார் பைக் அல்லது ஸ்கூட்டர் வந்து என்னைத் தாக்கி விடுகிறது. அல்லது கார் பஸ், லாரி - எவ்வளவோ இல்லையா? இவற்றை எல்லாம் தப்பி நான் ஒழுங்காக மறுபுறம் போய்ச் சேர முடியுமா. சேருவேனா என்ற பயமும் சந்தேகமும் அலைக்கழிக்க