பக்கம்:பாரதி லீலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காக அவர்கருதி விட்டார் ; தமக்குத் தமிழ் தெரி யாது என்று நினைத்தே அவர்கள் அப்படிச் சொன்னதாக எடுத்துக் கொண்டார். உடனே அவருக்கு அடங்காத கோபம் வந்தது முகம் சிவந்தது ; மீசை துடித்தது. எனக்குத் தெரி யும் தமிழ் என்று கர்ஜித்தார் அவர் ; அவ்விதம் கர்ஜித்து ஒரு குதிகுதித்துப் பிளாட்பாரத்தை மிதித்து அதிரச் செய்தார். அன்னே பெலன்ட்; அவள் அவள் ; அவள் ' என்று கோபத்தோடு பல தடவை சொன்னுர். பெண்மணிகளே அவள்” என்று குறிப்பது மரியாதைக் குறைவான பாஷை யன்று என்பது அவரது எண்ணம். அதை யார் கண்டார் ? பக்கத்திலே யிருந்தவர்கள் எல்லாரும் பயந்து போய் விட்டார்கள். இந்தச் சம்பவம், பாரதியாரின் சுதந்திர இறு மாப்பையும் சிறுமை கண்டு பொங்கும் தன்மை யையும் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/17&oldid=816534" இலிருந்து மீள்விக்கப்பட்டது