பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும், செய்திப் பத்திரிகைகளை வாசிக்கிற பழக்கமும் அதிகரிக்க அதிகரிக்க, பத்திரிகைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பான நிகழ்ச்சியாகி விடுகிறது.

தமிழ் நாட்டிலும், கால வேகத்தில், தினப் பத்திரிகைகள் பலப் பல தோன்றுவது சகஜமாயிற்து.

1940 களுக்கு முன்பு, வரதராஜ நாயுடு வின் 'தமிழ் நாடு', சி. ஆர். சீனிவாசன் ஆசிரியராக இருந்து நடத்திய 'சுதேசமித்திரன்’ நாட்டில் பரவலாக வாசிக்கப்பட்டு வந்தன. தினமணி தோன்றிய பிறகு, அந்த நாளிதழ் வேகமாக மக்களின் ஆதரவைப் பெற்றது.

'சுதேசமித்திர னுக்கும் தினமணி' க்குமிடை4ே ஒருவகைப் போட்டி நிலவியதாகத் தோன்றியது.

ஒரு சந்தர்ப்பத்தில், சுதேசமித்திரன் பத்திரிகையை விளம்பரப்படுத்துவதற்காக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. "தமிழில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் தினசரிப் பத்திரிகை சுதேசமித்திரன்’ என்று அச்சிட்டு ஒட்டினார்கள் அதன் நிறுவனத்தினர்.

மறுநாளே அந்தப் போஸ்டர்’களின் அருகருகே தினமணி பற்றிய சுவரொட்டிகள் காணப்பட்டன. 'கிழடு தட்டிய பத்திரிகை அல்ல தினமணி என்ற ೧TF55 அவற்றில் மிளிர்ந்தது.

வாசகர்களும் விமர்சகர்களும் 79