பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட்டமிட்டார்கள். குறைந்த விலையில், அதிகப் பக்கங்களுடன், நல்ல விஷயங்களை, புத்தகமாக

வெளியிட முனைந்தார்கள்.

"நவ யுகப் பிரசுராலயம்’ என்ற பெயரில் செயல்படத் துவங்கிய அந்த நிறுவனம், தனது முதலாவது வெளியீடு ஆக, ஏ.என். சிவராமன் எழுதிய , மாகாண சுயாட்சி என்ற புத்தகத்தைப் பிரசுரித்தது. அப்போது அவர், தினமணி உதவி ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்தார்.

எட்டனா விலையில், அதிகமான பக்கங்களுடன், ,மாகாண சுயாட்சி வெளிவந்தது. விளக்கமாக, வெகு தெளிவாக விஷயங்களை எடுத்துக் கூறியிருந்தார் ஏ.என்

சிவராமன்.

வாசக ர் க ள் ஆ ர் வ த் தோடு அதை வாங்கிப் படித்தார்கள், வெளிவந்ததுமே நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் புத்தகம் வெகு விரைவிலேயே ஆயிரக் கணக்கான பிரதிகள் விலைபோயிற்று.

அடுத்து அடுத்து, நவயுகப் பிரசுராலயம் எட்டனா விலையில், வாசகர்களுக்கு லாபகரமானது எனத் தோன்றிய நல்ல புத்தகங்கள் வெளியிட்டது.

சார்லஸ் டிக்கன்சின், இரு நகரங்களின் கதை, (எ டேல் ஆஃடுளலிட்டீஸ்) என்ற நாவலை, கி. ரா. வின் மொழி பெயர்ப்பில் தேய்ந்த கனவு’ எ ன் து பிரசுரித்தார்கள்,

வாசகர்களும் விமர்சகர்களும் 31