பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு, திரும்பத் திரும்பப் படித்து மகிழ்வதில் வாசகர்கள் விருப்பம் உடையவர்களானார்கள்.

கல்கியைப் பின்பற்றி சரித்திர நாவல் கள் எழுதுகிற எழுத்தாளர்களும் அதிகரித்தார்கள். ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்கு - அதன் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு - சரித்திர நாவலைத் தொடர்கதையாக வெளியிட வேண்டியதும் அவசியமாகும் என்ற நம்பிக்கையும் பத்திரிகை வட்ட ர தில் வேரூன்றி விட்டது.

வார இதழ்களும், மாதப் பத்திரிகைகளும் மட்டுமல்லாது, நாளிதழ்கள் கூட தொடர்கதை பிர்சுரிக்கி வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்தன.

ஒரே பத்திரிகை இரண்டு மூன்று தொடர்கதை களை வெளியிடுவதும் வழக்கத்துக்கு வந்தது.

ஒரு தொடர்கதை முடியப் போகிற கட்டத்தில், புதிதாக இன்னொரு கதைத் தொடரை ஆரம்பிப்பது. இதன் மூலம் வாசகர்கள் தொடர்ந்து அந்தப் பத்திரிகையை வாங்கிப் படிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை உண்டாக்குவது. இது பத்திரிகைகள் கையாள்கிற ஒரு நியதி ஆகிவிட்டது. -

வாசகர்கள் பத்திரிகைக்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. ஒரே இதழில் எத்தனை தொடர்கதைகள் வெளி வந்தாலும், அவற்றை விடாது படித்து மகிழக் கூடிய வாசகர்கள் ரொம்பப் பேர் இருக்கிறார்கள்.

வாசகர்களும் விமர்சகர்களும் 71.