பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாலும் சரி- திருமணம், ஆண்டு நிறைவு, புதுமனை புகுவிழா போன்ற அனைத்து விசேடங்களுக்கும் பணம் அன்பளிப்பாகத் தருவதற்குப் பதிலாக, ($p . 6\! . புத்தகங்களையும் இதர பகுத்தறிவுப் பிரசுரங்களையும் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று அண்ணாதுரை மேடைதோறும் அறிவுறுத்தினார்.

அண்ணாதுரையைப் பின்பற்றி, மற்றுமுள்ள தலைவர்களும், அக்கருத்தை எடுத்துக் கூறினார்கள். அதற்கெல்லாம் நல்ல பலன் இருந்தது.

அண்ணாதுரையின் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவருடைய வாக்கு வன்மையினால் வசீகரிக்கப்பட்டவர்களும், அவரது அறிவுரையை ஏற்றுக் கொண்டு அவ்விதமே செயலாற்றினார்கள்.

இதனால் புத்தகங்கள் - முக்கியமாக, மு. வ. வின் நூல்கள் - அதிகம் விலை போவது சாத்தியமாயிற்று.

1940 களில் - இரண்டாவது உலக மகா யுத்தம் நிகழ்ந்த காலத்திலும், யுத்தத்துக்குப் பிந்திய சில வருடங்களிலும், - நாட்டு மக்கள் பலவிதமான சிரமங்களையும், பொருள் த ட் டு ப் பா டு க ைள யு ம் அவை சம்பந்தமான கட்டுப்பாடுகளையும் அனுபவித்து அல்லல் உற்றார்கள். எனினும், நாட்டில் பணப்புழக்கம் அதிகம் இருந்தது. அதனால் சாதாரண ஜனங்கள் கூட பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்குவதில் உற்சாகம் காட்டினார்கள். தனிநபர்கள் புத்தகங்கள்

வாங்கிப் படிக்கிற பழக்கம் நெடுகிலும் காணப்பட்டது.

வாசகர்களும் விமர்சகர்களும் 45