பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடங்களும், பள்ளிப் படிப்பும், பண்டிதர் களும், தற்காலக் கல்வி முறையும் தமிழர்களின் ரசனை உணர்வை மழுங்கடித்து விட்டதாக - உண்மையான கவிதையை உணர்ந்து ரசிக்கக் கூடிய மக்களின் திறமையை சீர்குலைத்து விட்டதாக - அவர் குறை

கூறினார்.

நல்ல கவிதைகளைத் தேடி எடுத்து ரசித்து மகிழ்ந்த டி.கே. சி. அவற்றின் நயங்களை மக்களுக்கு கவையாக எடுத்துக் கூறுவதில் இன்பம் கண்டு வந்தார். கம்பன் பாடல்களை நன்கு சுவைத்து இன்புற்ற அவச் கம்பராமாயணத்தில், கம்பன் பாடாத பாடல்கன் எண்ணற்றவை இடைச்செருகலாகப் புகுத்து விட்டன என்று கூறிப் பெரும் அளவில் அவற்றைக் கழித்துக் கட்டினார். கம்பன் பாடிய உண்மையான பாடல்கள் என அவர் உணர்ந்த பாட்டுகளில் கூட அநேக இடங்களில் வருகிற சொற்கள் பொருத்தமற்றவை. கம்பன் எழுதிய சொற்கள் அல்ல அவை என்று கூறி, பொருத்தமான சொற்கள் என அவர் கருதிய வார்த்தை களைச் சேர்த்து கம்பராமாயணத்தை திருத்தி அமைத்தார். டி. கே. சி. யின் திருத்தங்களுடன் புதிய பதிப்பு கம்பர் தரும் ராமாயணம்' என்ற பெயருடன் வெளிவந்தது.

டி. கே. சி. யின் இச்செயலுக்கு எதிர்ப்பும் அதிகமாக இருந்தது.

கம்பர் இந்தச் சொல்லைத் தான் இந்த இடத்தில் உபயோகித்திருப்பார் என்று டி. கே. சி. எப்படி கண்டு பிடித்தார்? நாணயங்களைச் சுண்டிப் பார்த்து, இது

இ வாசகர்களும் விமர்சகர்களும் 145.