பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனினும், மணிக்கொடி யும் "மணிக்கொடி’ எழுத்தாளர்களும் விமர்சனத்தை வளர்த்ததில்லை.

பாரதி சாதார ணக் கவியா அல்லது மகாகவியா என்றொரு விவாதம் அந்நாட்களில் கடுமையாக நடந்தது. வ. ரா. என்று குறிப்பிடப்படும் வ. ராமஸ்வாமி, பாரதி மகாகவி என வாதிட்டார். பாரதி சாதாரணக் கவிஞர்

தான் என்று கட்சி கட்டினார் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி.

வ. ரா. வுக்கு ஆதரவாக, கு. ப. ராஜகோபாலனும், "சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் பாரதியார் கவிதைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதினார்கள். இவை பின்னர் 'கண்ணன் என் கவி’ என்ற புத்தகமாகப் பிரசுரம் பெற்றன. இக் கட்டுரைகள், பெரும்பாலும், பாரதியாரை வியந்து அவரது கவிதைகளை ரசித்துப் பாராட்டும் உரைகளாகவே அமைந்திருந்தன.

ஆயினும், அவற்றை குறிப்பிடத்தகுந்த விமர்சன முயற்சிகள் என்று கருதலாம்.

கு. ப. ராஜகோபாலனும், பெ. கோ. சுந்தரராஜனும் விமர்சனத் திறன் பெற்றவர்கள் என்பதை அக்கட்டுரைகள் எடுத்துக் காட்டின. அவர்கள் முயன்று ஈடுபட்டிருந்தால், நல்ல விமர்சகர்களாகவும் விளங்கியிருக்கக் கூடும்.

ஆனால், ஏனோ அவர்கள் அத்திசையில் கருத்து செலுத்தவில்லை. விமர்சனம் எழுதிக் கொண்டிருப்பது வீண் வேலை என்றும், விமர்சனம் எழுதுவதன் மூலம் நண்பர்களையும் பகைவர்களாக்கிக் கொள்ளவே நேரிடும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 139