பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மாலைமதி', ராணிமுத்து போல் அல்லாது, பல எழுத்தாளர்களிடம் புதுசாக நாவல் எழுதித் தரும்படி கேட்டு வாங்கிப் பிரசுரித்தது. ஒரு ரூபாய் விலையில் அதிகமான பக்கங்களுடன், அழகான கவர்ச்சிப்பட அட்டையுடன் வரும் இந்த வெளியீடு வாசகர்களைப் பெரும் அளவில் ஈர்க்க முடிந்தது.

அதன் வெற்றியைக் கண்ட ஜனரஞ்சகப் பத்திரிகை ஒவ்வொன்றும் மாதம் ஒரு நாவல்’ வெளியீட்டைப் பிரசுரிக்கத் துணிந்தது.

இவை எல்லாம் பத்தாயிரக்கணக்கில் விற்பனை ஆயின, ஆகின்றன. வாசகர்கள் விரும்பிப் படிக்கிற தொடர்கதை' எழுத்தாளர்கள் தான் இம்மாத வெளியீடு களுக்காகவும் நாவல்கள் எழுதிக் கொடுக்கிறார்கள். மசாலாத்தனங்கள் பலவும் சேர்க்கப்பட்ட கொலை, மர்ம நாவல்களே இவ் வெளியீடுகளில் இ ட ம் பெறுகின்றன.

மாத நாவல் வெளியீடு லாபகரமான பிசினஸ் ஆக வளர்வதைக் கண்ட அநேகர் தனித்தனியே இந்த சகப் பிரசுரங்களை ஆரம்பித்து நடத்துவது கால நியதி ஆகி விட்டது.

ஏற்கனவே மாத நாவல் வெளியிட்டு வந்தவர்கள் தங்கள் வெளியீட்டை மாதம் இரு முறை என்று ஆக்கிவிட்டார்கள். மாதம் ஒரு தடவை வந்து கொண்டிருந்த மாலைமதி வாரம் தோறும் வெளிவரும் பிரசுரம் ஆகி விட்டது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 111