பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்ச்சைக்கு உள்ளான இவ்விமர்சனக் கட்டுரை தி. க. சி. க்கு நல்ல கவனிப்பு பெற்றுத் தந்தது. (இப்பவும் அத்த்க் கட்டுரையைக் குறிப்பிட்டு, தி. க. சி யின் விமர்சன

திறமையையும் நேர்மையையும் இலக்கியவாதிகன் பாராட்டுவது உண்டு.)

பின்னர் மணிக்க்ெசடி எழுத்தாளர்கள்" கதை களை ஆய்வு செய்யும் விமர்சனக் கட்டுரைகணை தி. க. சிவசங்கரன் தாமரை மாத இதழில் எழுதினார்.

இலக்கிய விமர்சனத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சி. சு. செல்லப்பா எழுத்து’ என்ற மாத இதழை ஆரம்பித்தார்-1960 களில். தமிழில் இலக்கிய் விமர்சனத்துக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை இது தான். அது மட்டுமல்ல். பெருவாரியான வாசகர்கள் தேவை என்று எதிர்பார்க்காது, விற்பனைக்கு ஏஜன்டு க்ண்ள்யும் கடைகளையும், நம்பாது, குறைந்த அளவில் குறிப்பிட்ட எண்ணிக்கை சந்தாதார்கள் மட்டும் பேதும் என வரையறுத்துக் கொண்டு, திட்டமிட்டிகுறிக்கோளுடன் சிறு பத்திரிகை" ("லிட்டில் மேகசின்') ஏ ன் து சொல்லியவாறு தமிழில் வெளிவந்த முதலாவது புத்திரிகையும் இது தான்.

எழுத்து. இலக்கிய விமர்சனத்துக்கே முதலிடம் அளித்து முக்கியத்துவம் தந்தது. ஆரம்ப காலத்தில் சில மாதங்கள் க. நா. சு. விமர்சனக் கட்டுரைகளும் மயன் என்ற பெயரில் கவிதைகளும் அதில் எழுதினார். பின்னர் "எழுத்து'வில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 153