பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனாலேயே, வணிக நோக்கில் நடத்தப்படுகிற சகல மொழிகளின் பத்திரிகைகளும் (ஆங்கிலத்தில் வெளி வருகிற பத்திரிகைகளையும் சேர்த்தே தான்) இந்த ரக விஷயங்களுக்காக தாராளமாகப் பக்கங்களைச் செலவிடுகின்றன.

முன்பு சுதேசமித்திரன்’ நாளிதழ் ஒவ்வொரு வாசமும் குறிப்பிட்ட ஒரு தினத்தன்று வார பலன்’ என்று சோதிடக் குறிப்புகள் வெளியிட்டு வந்தது. அந்நாளைய இதழ் மிக அதிகமான பிரதிகள் செலவாயின என்று கணக்கு கூறியது.

அதே போல, 'சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பு குறித்த ஒரு வாரத்தில் மாத ராசி பலன் பிரசுரித்தது. அந்த வாரத்திய இதழ் - இதர வாரங்களின் இதழ் களை விட - வெகு அதிகமாக விற்பனைக்குத் தேவைப்

பட்டது,

காலப்போக்கில், அநேகமாக எல்லா நாளிதழ்களும் ராசிபலனுக்கு ஒரு முழுப்பக்கம் ஒதுக்குவது சகஜமாகி விட்டது.

வாசகர்களின் மன இயல்பைப் புரிந்து கொண்ட பல வாரப் பத்திரிகைகளும், மாத இதழ்களும் கிரக பலன் வெளியிடுவதையும் தமது கடமையாகக் கொண்டு விட்டன.

ஒரு எழுத்தாளர் : ஒரளவு வாசகர்கள் நடுவே கவனிப்பும் பிர சித் தி யும் பெற்றிருந்தவர். பல

வாசகர்களும் விமர்சகர்களும் 103