பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரவரே சொல்கிற பாணியில் - சுவையான கதை அம்சமாக்கி நாவலாக எழுதியிருந்தார் காண்டேகர்.

வி. ஸ். காண்டேகரின் நாவல்களைத் தமிழாக்கித் தந்த கா. பூரீ. பூரீ., அவை மொழி பெயர்ப்புகள் என்று தோன்றாத விதத்தில், சுவையாக, நயமாக, திறமையாக உருவாக்கியிருந்தார். த மி ழ் வா சக ர் க ள் மத்தியில் காண்டேகர் நாவல்கள் அபரிமிதமான செல்வாக்கு பெற்றதற்கு, அவ்ஆசிரியரின் திறமை, எழுத்தாற்றல், நாவல்களுக்கு அவர் எடுத்துக் கொண்ட விஷயங்கள் அவற்றை அவர் கதையாக்கியிருந்த உத்திகள் இவை எல்லாவற்றுடனும், கா. பூரீ, பூரீ. யின் திறமையான தமிழாக்கமும் முக்கியமான காரணம் ஆகும்,

ஒரு பத் து வ ரு ட கால ம் - அ த ற்கு ம் அதிகமாகவே என்று சொன்னாலும் தவறு ஆகாது. தமிழ் நாவல் துறையில் காண்டேகர் சீசன் ஆட்சி செலுத்தியது. வாசகர்கள் காண்டேகர் நாவல்கள் மீது மோகம் கொண்டிருந்தனர். அவற்றை ஆவலோடு படித்தனர். திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்தனர்.

காண்டேகர் நாவல்களில் தாராளமாகச் சிதறிக் கிடந்த சி ந் த ைன க ைள பொன்மொழிகளாகப் பிரசுரித்தன பத்திரிகைகள், அவரது சித்தனைகளை, உவமைகளை, உருவகக் கதைகளைக் குறிப்பேடுகளில் தொகுத்து எழுதிக் கொண்டு, தாங்களும் படித்து, மற்றவர்களுக்கும் வாசித்துக் காட்டி மகிழ்ந்து போன ரசிகர்களும் அதிகமாகவே இருந்தார்கள்.

வாசகர்களும் விமர்சகர்களும் 41