பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதைகள் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பத்திரிகைகளின் வாயிலாகக் கவரத் தொட்ங்கியது 1930 களில் தான்.

தமிழ் சிறுகதை 1920 களிலேயே இலக்கியத்தரம் பெறத் தொடங்கியிருந்தது. வ. வெ. சு. ஐயர், மங்கையர்க் கரசியின் காதல், குளத்தங்கரை அரசமரம் அனார்க்கலி முதலிய கதைகளின் மூலம் புதுமையான சிறுகதைக் கலையின் வளர்ச்சிக்கு அடிகோலியிருந்தார்.

'பத்மாவதி சரித்திரம் என்ற இலக்கியத் தரமான நாவலை எழுதிய பெருங்குளம் அ. மாதவய்யா, சமூக் சீர்திருத்த நோக்குடன், குசிகர் குட்டிக் கதைகள்'

எழுதினார்.

கவி பாரதியாரும் , தமது கருத்துக்கள்ை எடுத்துக் கூறுவதற்காகக் கதைக் கலையைப் பயன்படுத்தினார்