பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகப் போக, இதர கவிதைகளையும் சித்திர அலங்காரங்

களுடன் வெளியிட்டன,

இதனால் பாரதியாரின் கவிதைத் திறமையும், அவரது கவிதைகளின் சிறப்பும் வாசகர்களுக்குத் தெரிய வந்தன.

அப்போது கூட, பாரதியார் ஒரு தேசீய கவி தான் என்று கட்சி கட்டுவதும்; இல்லை, அவர் மகாகவி என்று எதிர்வாதம் செய்வதும் தமிழ் பத்திரிகை உலகில் நிகழ்ந்தது.

‘சுதந்திரச் சங்கு வெளிவந்த காலத்திலேயே, காந்தி’ என்ற காலணாப் பத்திரிகையும் வந்தது. இதன் ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம். அவர் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த தமிழ்நடை எழுதும் ஆற்றல் உடையவர்.

“காந்தி யைத் தொடர்ந்து ஜெயபாரதி' 'மணிக்கொடி வாரப் பத்திரிகைகளும் வெளி வரலாயின.

'மணிக்கொடி .கே. சீனிவாசன், வ. ரா; டி. எஸ். சொக்கலிங்கம் ஆகியோரால், தேசீய வார இதழாக தடத்தப் பெற்றது. காந்தியத்தையும், பாரதி வழியையும் பின்பற்றி நாட்டின் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும், தனிமனித உயர்வுக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றியது. மணிக்கொடி யின் பிற்கால வளர்ச்சியும், வாழ்வும் , சாதனைகளும் தனி வரலாறு ஆகி விட்டன. மணிக்கொடி காலம் என்ற நூல்- பி.எஸ். ராமையா எழுதியது- அதன் சிறப்பை விளக்குகிறது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 14