பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைகள் எதற்காகத் தொடர்கதைகளை வெளியிடுகின்றன?

வாசகர்களைக் கவர்ச்சிப்பதற்காக. கிடைத்த வாசகர்கள் தொடர்ந்து அந்தப் புத்திரிகையை வாங்கி வாசிக்க வேண்டும் என்பதற்காக. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக இப்படிப் பல நோக்கங்கள் உண்டு, தொடர்கதை பிரசுரிக்கப்

படுவதற்கு,

இதற்காகத் தொடர்கதை உத்திகள் என்றே அநேக விஷயங்கள் கையாளப்படுகின்றன.

தொடர்கதையாக வெளியிடப்படுகிற நெடுங்கதை அல்லது நாவல் வாசகர்களை வசீக்ரிக்கக் கூடிய விதத்தில் எழுதப்பட வேண்டும். வாசகர்களின் கவனத்தைப் பிடித்து இழுக்கும் தன்ம்ையில் கதை சுவார்ஸ்யமாக அமைய வேண்டும். உளப்போர்ாட்டங்களை உண்ர்ச்சி கள்ை, மனித இயல்புகள்ை சித்திரிப்பதாகச் சொல்லி எழுதப்படுகிற புதுமை எழுத்துக்கள் - மறுமலர்ச்சிப் படைப்புகள் - போர் அடிக்கக் கூடியன்வாகவே

இருக்கும், பெரும்பான்மை வாசகர்களுக்கு.

தொடர்கதைகள் படிப்பதற்கு அலுப்புத் தராத விதத்தில், இலகுவாக வாசிக்கக் கூடிய தன்மையில், கதை ஒட்டமும், அடுக்கு அடுக்காகச் சம்பவங்களும், அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் துரண்டும் வகையில் கதைப் பின்னலும் சிக்கல்களும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு அத்தியாயமும் 'இனி என்ன?”

இ வாசகர்களும் விமர்சகர்களும் 67