பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைப் பார்சல் வந்த சிறிது நேரத்திலேயே பிரதிகள் பிய்த்துக் கொண்டு போயின! எண்ணற்ற

வாசகர்கள் ஏமாற்றம் அடைய நேரிட்டது.

அதனால் கடைக்காரரிடம் முன்கூட்டியே ஒரு ரூபாய் கொடுத்து விட்டு, பத்திரிகைக் கட்டின் வரவை எதிர்நோக்கிக் காத்து நின்றார்கள் பல பேர்.

ஏமாற நேர்ந்தவர்களுக்கு அமைதி அளிப்பதற்காக ஏஜன்டே ஒரு உத்தியைக் கையாண்டார். ஒன்றிரண்டு இதழ்களை வாடகைக்கு” விட்டுப் பணம் பண்ணினார்

அவர்.

அரைமணி நேரத்துக்கு இரண்டனா வாடகை. ஒருவர் படித்து மு டி த் ததும், அடுத்தபடியாக இன்னொருவர் படிக்கலாம். இப்படி நாள் பூராவும் ஒரே இதழ் (இரண்டனா பெறுமானம் உள்ளது) பலப் பல இரண்டனாக்களைப் பெற்றுத் தந்தது

விற்பனையாளருக்கு.

ஒரு இதழை விலைக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி (ஒரு ரூபாய் கொடுத்தவர்) தெரிந்தவர்களுக்கு வாடகைக்குத் தந்து ஒரு ரூபாய்க்கும் அதிகமாகவே சம்பாதிக்க முடிந்தது.

திருச்சி போன்ற நகரங்களில், பார்க்குகளிலும் பத்திரிகைக்கடை முன்னும் இப்படி வாடகை கொடுத்து’ இந்து நேசன் படித்து மகிழ்ந்த வாசகர்கள் அந்நாட்களில் நிறையப் பேர் இருந்தார்கள்.

வாசகர்களும் விமர்சகர்களும் 63