பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்களை இந்தி மூலம் அறிந்து தமிழில் மொழி பெய்ர்த்தார்கள்.

மணிக்கொடி எழுத்தாளர்கள் எனப் பெயர் பெற்றிருந்த திறமையாளர்கள் மொழி பெயர்ப்பிலும்.

தங்கள் ஆற்றலைக் காட்டினார்கள்.

புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன் செய்த மொழி பெயர்ப்புகள் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். சிட்டி’ என்ற புனை .ெ ப ய ரில் எழுதிய பெ. கே. சுந்தரராஜன் அப்டன் சிங்க்ளேர் என்ற அமெரிக்க ஆசிரியரின் நாவல்களை 1930 களிலேயே தமிழாக்கியுள்ளார்.

வங்க மொழி நாவல்கள் சிலவற்றையும் கு. ப. சா தமிழாக்கினர்ர். பின்னர் த. நா. குமாரஸ்வாமி, வங்க மொழி கற்று, பங்கிம் சந்திர சாட்டர்ஜி, தாராசங்கர் பானர்ஜி நாவல்களை மூலத்திலிருந்தே மொழி பெயர்ப்பு செய்தார்.

சரத் சந்திரர் நாவல்கள் பலவும் தமிழாக்கப்பட்டு, வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 1980 களிலும் 1940 களிலும்.

பிரேம் சந்த் இந்தியில் எழுதிய நாவல்களில் சில தமிழில் தரப்பட்டன.

உலக இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் க. நா. சுப்ரமண்யம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஹென்ரிக் இப்சன் நாடகத்தை

வாசகர்களும் விமர்சகர்களும் 87