பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஹனு மான்’ வாரப் பத்திரிகை சினிமா வுக்கென்று அதிக இடம் ஒதுக்கியது, குண்டுசி' என்ற பெயரில் எழுதிய பி.ஆர். எஸ். கோபால் அந்தப் பகுதியைக் கவனித்துக் கொண்டார். குண்டுசி பதில்கள் விறுவிறுப் பாகவும் குத்தலாகவும் சுவாரஸ்யமாகவும் வெளிப்பட்டன.

ஒரு சந்தர்ப்பத்தில் குண்டுசி எழுதிய பதில்களால் பாதிக்கப்பட்ட, யாரோ சிலர், அவர் தியாகராயநகர் பாண்டி பஜாரில் ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்த சமயம், அவரை வழிமறித்து, கத்தியால் குத்தி விட்டு ஓடிப் போனார்கள். நல்ல வேளையாக, கத்திக் குத்து குண்டுசியின் முகத்தில் பட்டு காயம் ஏற்படுத்தியதே தவிர, அவருடைய உயிருக்கு ஆபத்து உண்டாக்க வில்லை.

சினிமா உலகத் தகவல்களை விறுவிறுப்பாக எழுதி, கத்திக் குத்து வாங்கிய முதல் தமிழ் பத்திரிகை எழுத்தாளர் குண்டூசி கோபால் தான்.

சினிமா உலக விஷயங்களை பர ய ர ப் புச் செய்திகளாக அம்பலப்படுத்தியதால் தமிழ்பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி 1940களில்

நடைபெற்றது. அதை உரிய இ டத் தி ல் கவனிக்கலாம்.

வாசகர்கள் புதுமைகளை வரவேற்றார்கள்.

முக்கியமான, பேச்சுக்கும் கவனிப்புக்கும் இலக்கான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் கணிசமாகவே இருந்தார்கள். ஆனால்,

வாசகர்களும் விமர்சகர்களும் 29