பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படங்கள் பற்றிய செய்திகள், படவிமர்சனம், 1. ப்பிடிப்பு சம்பந்தமான தகவல்கள் மற்றும் சுவாரஸ்யமான கதை கட்டுரைகளே சினிமாப் பத்திரிகை

களில் அப்போது இருந்தன.

'முதல் தமிழ் சினிமாப் பத்திரிகை என்று விளம்பரப் படுத்திக் கொண்ட சினிமா உலகம் வெகு காலம் வரை அரையனா விலையில் விற்பனையாயிற்று. சாதாரண ரோஸ் கலர் தாளை அட்டையாகக் கொண்டு, நியூஸ் பிரிண்ட் தாளில் அச்சாகி வந்தது. இங்கிலீஷ் படங்கள், இந்திப் படங்கள் பற்றிய தகவல்களுடன், தமிழ் படங்கள்

திய விஷயங்களும் அதில் இடம் பெற்றன.

பம்பாயிலிருந்து பிரசுரமான ஆங்கில சினிமாப் பத்திரிகை பில்மிந்தியா’வில் கேள்வி-பதில் பகுதி வாசகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட அம்சமாகும். அதன் ஆசிரியர் பாபுராவ் பட்டேல் திறமையாகவும் சாதுர்ய மாகவும் அறிவுக் கூர்மையுடனும் பதில்களை எழுதிக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் பல பத்திரிகைகள் கேள்வி - பதில்’ பகுதி தொடங்கி வெளியிடுவதற்கு பில்மிந்தியா வின் ஆசிரியர் பாபுராவ் பட்டேல் தான் முன்னோடியாவார்.

சினிமா உலகம்’ பத்திரிகையும் கேள்வி - பதில் பகுதி வேளியிட்டு வந்தது.

தினப்பத்திரிகைகளும் சினிமாபற்றிய தகவல்களைப் பிரசுரிக்க முன் வந்தன. வா ரப்பத்திரிகைகளிலும் சினிமாப் பகுதி தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது .

இ வாசகர்களும் விமர்சகர்களும் 28